வெல்கம் டிரிங்
தேவையானவை:
மாம்பழம் (மல் கோவா, பங்கனப்பள்ளி, ஜவ்வாது, இமாம்பசந்த் போன்றவை) – 1
இஞ்சி – சிறிய துண்டு,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
சர்க்கரை அல்லது தேன் – தேவையான அளவு,
தண்ணீர் – தேவைக்கேற்ப.
செய்முறை:
மாம்பழத்தின் சதைப் பகுதியை மட்டும் துண்டுகளாக்கவும். இஞ்சியைத் தோல் சீவி துருவவும். மிக்ஸி ஜாரில் மாம்பழத் துண்டுகள், இஞ்சித் துருவல், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை (அ) தேன், தேவையான தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துப் பரிமாறவும்.
குறிப்பு: மாம்பழத்துக்குப் பதில் அன்னாசிப் பழத்திலும் இந்த டிரிங் தயாரிக்கலாம்.