சிம்ளி
தேவையானவை:
கேழ் வரகு மாவு – ஒரு கப்,
பொடித்த வெல்லம் – முக்கால் கப், வேர்க்கடலை – கால் கப்,
எள் – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
வேர்க்கடலை, எள் இரண்டையும் வாணலியில் லேசாக வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும். கேழ்வரகு மாவில் சிறிதளவு நீர் விட்டு நன்கு பிசைந்து கனமான ரொட்டியாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதனுடன் பொடித்த வேர்க்கடலை – எள், வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதை கிண்ணத்தில் போட்டு, ஸ்பூன் வைத்து பரிமாறலாம் அல்லது உருண்டை பிடித்து சாப்பிடக் கொடுக்கலாம்