
மேத்தி கார்ன் புலாவ்
தேவையான பொருட்கள்
மேத்தி – ஒரு கட்டு
ஸ்வீட் கார்ன் – ஒரு கப்
வெங்காயம் – 2
அரிசி – 2 கப்
தக்காளி – 2
தயிர் – அரை கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு – தாளிக்க
எண்ணெய் (அ) நெய் – தாளிக்க
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – அலங்கரிக்க
மேத்தியை ஆய்ந்து சுத்தம் செய்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்கவும். அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி விட்டு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
வெங்காயம், தக்காளி வதங்கியதும் எல்லா தூள் வகைகளையும் சேர்த்து கிளறவும்.
அதில் மேத்தி இலைகள் மற்றும் கார்னை சேர்த்து அதனுடன் தயிரையும் சேர்த்து பிரட்டவும்.
வதக்கியவற்றை குக்கரில் மாற்றி ஊற வைத்த அரிசியை சேர்த்து கிளறவும். அரிசி சிறிது வறுப்பட்டதும் 4 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.
சுவையான ஹெல்தியான மேத்தி கார்ன் புலாவ் ரெடி.