
வயிற்றில் தலை முடியா?
தலைமுடி வயிற்றுக்குள் சென்று விட்டால் பேதியாகத் தொடங்கி விடும். ஒரு நெல்லை எடுத்து வெல்லத்திற்குள்ளோ அல்லது வாழைப் பழத் துணுக்கினுள்ளோ வைத்து அப்படியே விழுங்க உள்ளிருக்கும் முடி வெளியாகி பேதியை நிறுத்தி விடும்.
வலிப்பு நோயா?
பார்லி தண்ணீரில் இளநீரையும் தேளையும் கலந்து உள்ளுக்குக்கொடுக்க நரம்புகள் பலம் பெறுவதல் வலிப்பு நோய் உடளே குணமாகும். 198. வாந்தியை நிறுத்த…
மயிலிறகின் காம்பைச் சுட்டுக் கரியாக்கி தேனில் குழைத்து நாக்கில் தடவி சாப்பிடச் சொல்லவும். உடனே வாந்தி நின்று விடும்.
கறிவேப்பிலையை ஈர்க்குடன் இடித்துச் சாறெடுத்து, கிராம்பு, திப்பிலி சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க வாந்தி நிற்கும். பசி எடுக்கும்,
பஸ் பயணத்தில் வாந்தி வந்தால் எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதில் உப்பு, மிளகு தூவி ருசிக்க நிற்கும். வாயில் கிராம்பு அல்லது ஏலம் போட்டுக் கொண்டாலும் நல்லது.
வாய்ப்புண்ணுக்கு…
நெல்லி இலைகளை அளித்த நீரினால் அடிக்கடி வாய்க்கொப்பளித்து வர வாய்ப்புண்கள் ஆறிவிடும். நெல்லிச் சாற்றையும் தேனையும் சமமாகக் கலந்து மூச்சுத்தினாறல், நீண்டகால விக்கல்நோய் முதவியவற்றிற்குக் கொடுத்து வரலாம். சிவ மருத்துவர்கள் இதோடு சிறிது திப்பிலி சூரணத்தையும் சேர்த்துக் கொடுத்து வருகின்றனர்
மணித்தக்காளி இலைகளை வாயில் போட்டு மென்று சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வண்ணமே முற்றின தேங்காயை மென்று வைத்திருந்து விழுங்கினாலும் குணமாகும்.
இரண்டு பாதாம் பருப்பு. இரண்டு முந்திரிப் பருப்பு கொஞ்சம் கசகசா மூன்றையும் அரைத்துக் காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிட வாய்ப்புண் வயிற்றுப் புண் குணமாகும். இது நீண்ட இல்லற இன்பத்தையும் கொடுக்கக் கூடியது.
வாயில் வயிற்றில் புண் இருந்தால் தேங்காய்ப் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வர சில நாள்களில் குணமாகும்.
மாசிக்காயை உடைத்து அதன் தோலை மாத்திரம் வாயில் போட்டு அடக்கிக் கொண்டு ஊறி வரும், நீரை விழுங்க வாய்ப்புண் குணமாகும். காரத்தை அடியோடு நிறுத்தி விட வேண்டும்,
வாய் நாற்றம் நீங்க…
எலுமிச்சம் பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் பிழிந்து சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு வரலாம். அந்தத் தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தாலும் நல்லதே.