லஞ்ச் பாக்ஸ் கார்னர்: ப்ரவுன் ரைஸ் பிசிபேளாபாத்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Brown Rice Philippabad - 2026

ப்ரவுன் ரைஸ் பிசிபேளாபாத்
தேவையான பொருட்கள்
.துவரம் பருப்பு – அரை கப்
ப்ரவுன் ரைஸ் – ஒரு கப்
மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி
பூண்டு – 2
பரங்கிக்காய் – ஒரு துண்டு
கத்திரிக்காய் – 4
பட்டாணி – ஒரு கப்
உருளை – ஒன்று
ஜுசினி – 2
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
புளி – சிறிதளவு
கடுக, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயம், முந்திரி, வெண்ணெய் – தாளிக்க
உப்பு – தேவைக்கு ஏற்ப
சாம்பார்பொடி – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை
காய்கறிகளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் பருப்பு, பூண்டு,மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளாவும்.

அதே குக்கரில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

காய்கள் நன்கு வெந்ததும் ப்ரவுன் ரைஸ், பருப்பு, உப்பு, தண்ணீர் சேர்த்து வேக விடவும். அதன் பின்னர் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்.

வாணலியில் வெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பில்லை, முந்திரி சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றை சாதத்துடன் சேர்த்து கிளறி விட்டு சூடாக பரிமாறவும்.
மேலே கொத்தமல்லி தூவவும். சுவையான ப்ரவுன் ரைஸ் பிசிபேளாபாத் ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.