ராயல் தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள்
சாதம் – 2 கப்
தேங்காய் – 1/2 முடி
சின்ன வெங்காயம் – 4
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்லை – 4 இலை
உப்பு – 1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
முந்திரி – 10
செய்முறை
முதலில் வெங்காயத்தினை வெட்டி கொள்ளவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும்.
தேங்காயினை துருவி கொள்ளவும்.
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து பின் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.
அதன் பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கிய பிறகு உப்பு ,இஞ்சி சேர்த்து துருவி வைத்துள்ள தேங்காயினையும் சேர்த்து 2 – 3 நிமிடம் வதக்கவும்.
கடைசியில் சாதத்துடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
இப்பொழுது சுவையான தேங்காய் சாதம் ரெடி. தேங்காய் எண்ணெய் சேர்ப்பதால் மிகவும் ருசியாகவும் மணமாகவும் இருக்கும்