டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களை கூகுளிலிருந்து அகற்ற..!

Published:

card - 2026

பணம் செலுத்தும் ஆப்ஸ்களில் (payment making apps) உங்கள் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு விவரங்களை Save செய்து வைத்துள்ளீர்களா.?

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) “Payment Aggregators மற்றும் Payment Gateways-களை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லாத payment aggregators மற்றும் வணிகர்கள் கார்டு டேட்டாவை (card data-CoF) ஸ்டோர் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 30 வரை வணிகர்கள் அல்லது பேமெண்ட் ஆப்ஸ்கள் கார்டு டேட்டாக்களை சேமிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஜூலை 1 முதல் இதற்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனிடையே வாடிக்கையாளரின் அனுமதியை பெற்ற பின்னரே, ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி அவர்களது கார்டு விவரங்கள் சேமிக்கப்படும் என்று Google Pay கூறுகிறது.

வாடிக்கையாளர் விவரங்களை மிகவும் பாதுகாப்பான முறையில் சேமிப்பதாகவும் Google Pay உறுதியளித்துள்ளது. இது பற்றி அதன் சப்போர்ட் பேஜில் ” ஜூலை 1, 2022 முதல் இந்திய ரிசர்வ் வங்கி கார்டு சேமிப்பக விதிமுறைகளின் காரணமாக, தற்போதைய வடிவத்தில் வாடிக்கையாளர் அட்டை விவரங்களை (அட்டை எண், காலாவதி தேதி போன்றவை) Google இனி சேமிக்க முடியாது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

இருப்பினும், உங்கள் அங்கீகாரத்துடன், உங்கள் கார்டு விவரங்களை ஆர்பிஐ விதிமுறைகளுடன் இணங்கும் வடிவமைப்பில் சேமிப்போம், மேலும் உங்களின் முக்கியமான கார்டு விவரங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்போம்” என்று தெரிவித்துள்ளது.

புதிய வடிவத்தில் உங்கள் கார்டை சேமிக்க Google Pay-வை எவ்வாறு அங்கீகரிக்கலாம்..!

கூகுளின் தகவல்படி, நீங்கள் Visa அல்லது Mastercard-ஐ பயன்படுத்தினால், உங்கள் கார்டை புதிய வடிவத்தில் சேமிக்க Google Pay-வை அங்கீகரிக்கிறீர்கள் என்றால், உங்களின் தற்போதைய கார்டு விவரங்களை கொண்டு ஒரு கைமுறையாக (single manual payment) பணம் செலுத்த வேண்டும்.

உங்கள் கார்டு விவரங்களை மீண்டும் என்டர் செய்வதை தவிர்க்க, ஜூன் 30, 2022-க்கு முன் இந்த கட்டணத்தை செலுத்தவும்.

ஒருவேளை நீங்கள் நீங்கள் RuPay, American Express, Discover அல்லது Diners கார்டைப் பயன்படுத்தினால், ஜூன் 30, 2022-க்கு பிறகு உங்கள் கார்டு தகவலை Google சேமிக்காது, ஏனெனில் புதிய வடிவமைப்பின் படி, இந்த கார்டு நெட்வொர்க்குகள் இன்னும் சப்போர்ட் செய்யப்படவில்லை.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

ஜூலை 1, 2022 முதல், Google சர்வீசஸ் முழுவதும் இந்த கார்டுகளுக்கான சப்போர்ட் மாறும்.

Google-லிருந்து உங்கள் கார்டை எவ்வாறு அகற்றுவது..

உங்கள் கார்டு விவரங்களை Google-லிருந்து ரிமூவ் செய்ய விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது..

Google Ads யூஸர்களுக்கு:

உங்கள் Google Ads அக்கவுண்ட்டில் Sign in செய்யவும்

Tools-ஐ கிளிக் செய்து Billing என்பதன் கீழ் Summary என்பதை கிளிக் செய்யவும்

Payment methods-ஐ கிளிக் செய்து பின்னர் Remove கிளிக் செய்யவும்

Google Cloud யூஸர்களுக்கு :

உங்கள் கார்டை ரிமூவ் செய்ய Remove a payment method என்பதை சரிபார்க்கவும்.

Google Workspace யூஸர்களுக்கு :

ஒர்க்ஸ்பேஸ் அட்மின்கள் admin console-லில் இருந்து பேமெண்ட்ஸ்களை அக்சஸ் செய்ய வேண்டும்.

கார்டை ரிமூவ் செய்ய Remove a payment method என்பதை சரிபார்க்கவும்.

மற்ற அனைத்து Google யூஸர்களுக்கு :

Google payments center-ல் Sign in செய்யவும்

Add a payment method என்பதை கிளிக் செய்து பின்னர் Remove-வை கிளிக் செய்யவும்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

Related articles

Recent articles

spot_img