health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: செருப்புக் கடி, சிறுநீர் கோளாறு, நீரழிவு,

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

செருப்புக் கடித்து விட்டதா?

மூங்கில் கழியை சிறு துண்டாக வெட்டி கரகரப்பான கல்வில் தண்ணீர் விட்டு உரைத்து செருப்பு கடித்த இடத்தில் தடவி வர புண் குணமாகும்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு…

கீழாநெல்லி இலையைக் கைப்பிடியளவு எடுத்து சாறு பிழிந்து கற்கண்டுத் தூள் சேர்த்து சாப்பிட்டு வர சிறுநீர் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.

பாமாயில் பரிசோதனையிலே…

  • பாமாயிலில் ‘பீடா கரோடின்’ என்ற சத்து இருக்கிறது. இது சில வகை புற்றுநோய்களை வரவிடாமல் தடுக்கிறது என்று கண்டுபிடித் துள்ளனர்.

நீரிழிவுக்காரர்களுக்கு..

பேரீச்சம்பழம் நீரிழிவு நோயைக் குணப்படுத்தும். பித்த சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தி இரத்த விருத்தி ஏற்படுத்துகிறது. ஆரஞ்சு, அன்னாசி, தர்ப்பூசணி, பழங்களையும் நீரிழிவுக்காரர்கள் சாப்பிடலாம். சர்க்கரை சத்து அதிகமாக உள்ள பழங்களை சாப்பிடக் கூடாது. வாழைப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்.

அத்திப்பழ வைத்தியம்

அத்திப்பழத்தை வெயிலில் உலர்த்தி சிறு சிறு துண்டுகளாக்கி தேனில் ஊற வைத்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு துண்டுகள் சாப்பிட வர வயிற்றுக் கோளாறுகள் குணமாகும். மலசுத்தி ஏற்படும். குடல் சம்பந்தமான எல்லா நோய்களும் குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.