புது போன் மாத்தப்போறீங்களா..? இது கண்டிப்பா பண்ணுங்க..!

Published:

phone - 2026

இப்போது மொபைல் வைத்திருக்கும் பெரும்பாலானோர் கைகளில் இருப்பது ஸ்மார்ட்போன்களே. குறைவான விலையில் கூட பேசிக் ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதால் பட்டன் போன் வைத்திருந்தவர்கள் கூட இப்போது ஸ்மார்ட்போன்களையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

பட்டன் போனாக இருந்தால் அடுத்தது புதிய போனுக்கு மாறுவது எளிதாக இருக்கும். ஆனால் பழைய ஸ்மார்ட் போனிலிருந்து, புதிய ஸ்மார்ட் போனுக்கு மாறுவது ஒரு கடினமான விஷயமாக பலருக்கும் இருக்கிறது. ஏனென்றால் பழைய மொபைலில் இருந்து டேட்டாவை காப்பி செய்வது, செட்டிங் செய்வது மற்றும் ஆப்ஸ்களில் மீண்டும் லாகின் செய்வது என பல வேலைகள் இருக்கிறது.

உங்கள் பழைய ஸ்மார்ட் போனை மாற்ற நீங்கள் திட்டமிட்டால் உங்கள் பெர்சனல் டேட்டாவை அழிக்க உங்கள் மொபைலை ஃபார்மெட்டிங் (formatting) செய்வது அவசியம்.

ஒருசிலர் தாங்கள் பயன்படுத்தி வரும் மொபைலை ரீசெட் செய்து புதிதாக ஸ்டார்ட் செய்ய விரும்புவார்கள். ஸ்மார்ட் போனை ரீசெட்ட்டிங் செய்வது அனைத்து செட்டிங்ஸ்களையும் பழையநிலைக்கு மாற்றும் என்றாலும் உங்கள் மொபைலில் இருக்கும் போட்டோஸ், வீடியோஸ், மெசேஜஸ் உள்ளிட்ட பல பர்சனல் டேட்டாக்களையும் சேர்த்தே அழித்து விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோனை ரீசெட்டிங் செய்ய மிக குறைந்த நேரமே ஆகும் மற்றும் பெரும்பாலான நவீன ஸ்மார்ட் போன்களில் இதை எளிதாக செய்ய முடியும்.

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

உங்கள் ஆண்ட்ராய்ட் ஃபோனிலிருந்து எல்லா டேட்டாவையும் அழிக்க உதவும் எளிய வழிமுறை..

கீழ்காண போகும் வழிமுறைகள் சாம்சங் மற்றும் கூகுள் பிக்சல் ஸ்மார்ட் போன்களின் அடிப்படையில் அமைந்திருக்கும் என்றாலும் டேட்டா எரேஸ் செயல்முறையை தொடங்க உங்கள் ஸ்மார்ட் போனின் செட்டிங்க்ஸிற்கு சென்று “reset” அல்லது “erase” என்று தேடலாம்.

ஸ்மார்ட் போனை ரீசெட் செய்யும்முன், உங்கள் அனைத்து டேட்டாக்களின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பேக்கப்ஸ் உங்களிடம் உள்ளதா? என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

உங்கள் கூகுள் பிக்சல் / ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ஃபேக்ட்ரி ரீசெட் செய்வது எப்படி.?

Settings ஆப்-ஐ ஓபன் செய்து System-ஐ டேப் செய்யவும்.

Reset ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.

இப்போது லிஸ்ட்டின் கீழே உள்ள Erase all data (factory reset) என்பதை செலக்ட் செய்யவும்.

அழிக்கப்பட உள்ள டேட்டா தொடர்பான தகவலை படிக்கவும். பின் Erase all data-வை டேப் செய்யவும்.

டேட்டா எரேஸ் ப்ராசஸை அங்கீகரிக்க உங்கள் பேட்டர்ன் அல்லது பாஸ்வேர்டை என்டர் செய்யவும்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

உங்கள் மொபைலை ரீசெட் செய்ய துவங்க ஸ்கிரீனில் தோன்றும் உங்கள் எல்லா டேட்டாவும் அழிந்து விடும் என்று எச்சரிக்கும் Erase all data ஆப்ஷனை டேப் செய்யவும்.

சாம்சங் ஸ்மார்ட் போனில் ஃபேக்ட்ரி ரீசெட் செய்வது எப்படி?

Settings-ஐ ஓபன் செய்து Accounts and backup-ற்கு செல்ல வேண்டும். பின் Manage accounts என்பதை செலக்ட் செய்ய வேண்டும்.

லிஸ்ட்டில் உங்கள் சாம்சங் அக்கவுண்ட்டை கண்டறிந்து entry-ஐ டேப் செய்யவும். பின் Remove account-ஐ செலக்ட் செய்யவும்.

மீண்டும் மெயின் செட்டிங்ஸ் மெனுவிற்கு சென்று General management-ஐ டேப் செய்யவும்.

கீழே ஸ்க்ரால் செய்து Reset-ஐ அழுத்தவும். பின் Factory data reset-ஐ டேப் செய்ய வேண்டும்.

அழிக்கப்பட உள்ள டேட்டா தொடர்பான தகவல்களை படித்து விட்டு, பின் Reset பட்டனை tap செய்யவும்.

ப்ராசஸை அங்கீகரிக்க உங்கள் பேட்டர்ன் அல்லது பாஸ்வேர்டை என்டர் செய்யவும்.

உங்கள் சாம்சங் ஸ்மார்ட் போனை ரீசெட் செய்ய இப்போது Delete all கொடுக்கவும்.

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity

Related articles

Recent articles

spot_img