வேட்டையன் – விமர்சனம்
முனைவர் கு.வை.பாலாசுப்பிரமணியன்
நான் திரைப்படங்களை முதல் நாளே பார்க்கும்வழக்கம் உடையவன் அல்ல. ரஜினிகாந்தும், அமிதபும் நடித்த 1983இல் வெளியான அந்தா கானூன்என்ற ஹிந்திப் படத்தை முதல் நாளே பார்த்திருக்கிறேன்.
அதே போல கமலஹாசன் நடித்த அந்தஒரு நிமிடம் தமிழ்ப்படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்திருக்கிறேன். அதன் பிறகுஇன்று (10.10.2024) ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தினை பார்த்தேன்.
தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து வரும் ரஜினிக்கு இதுவும் வெற்றிப் படமாக அமைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் படத்தின் தொடக்கமே, ஆங்கிலேயர்களின் வருகையால் (லார்ட் மெக்காலே படம் காண்பிக்கப்படுகிறது) கல்விஅனைத்து மக்களுக்கும் கிடத்தது என்ற ஸ்டேட்மெண்டுடன் ஆரம்பிக்கிறது. அதனை உறுதி செய்யும்வகையில் படக்கதை அமைந்திருக்கிறது.
நீட் தேர்வு அரசுப் பள்ளியில் படிக்கும்மாணவர்களுக்கு ஒரு அநீதி; நீட் தேர்வுக்கான கோச்சிங் வகுப்புகள் மாணவர்களை வாழ்க்கையில்தோல்வி மனப்பான்மையை அதிகரிக்கின்றன; போன்ற கருத்துகள் ஆங்காங்கே படத்தில் சொல்லப்படுகின்றன.தொடக்கத்தில் எங்கவுண்டர் சரி/தவறு என்கிற ரீதியில் செல்கின்ற கதை பின்னர் நீட் தேர்வு,கோச்சிங் வகுப்புகள் என திசைமாறுகிறது.
ரஜினி நன்றாக நடித்திருக்கிறார். பல்வேறுஉணர்ச்சிகளை அளவாகக் காண்பித்திருக்கிறார். ஃபகத் ஃபாசில் நன்றாக நடித்திருக்கிறார்.அபிராமிக்கு நடிக்க பெரிய ஸ்கோப் இல்லை. மஞ்சு வாரியருக்கும் அதுபோலவே. அமிதாப் படத்திற்குதேவையில்லாத ஆணி. ஹிந்தி ரசிகர்களைக் கவர் அவரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ரித்திகாசிங் ASPயாக வருகிறார். பரவாயில்லை. அம்மணி நன்றாக உடல் எடை போட்டுவிட்டார்.
இன்று நான் படம் பார்த்த தியேட்டரில் சுமார்40 இருக்கைகள் காலி. வரும் நாட்களில் என்னாகுமோ? அநாவசிய டூயட் பாடல்கள் இல்லாததால்படம் நன்றாக உள்ளது.