December 5, 2025, 9:34 AM
26.3 C
Chennai

சம்ஸ்கார் பாரதி விழாவில், அப்படி என்ன பேசினார் ஆர்எஸ்எஸ்., தலைவர்!?

rss mohanji bhagavat - 2025

samSkaar paarathiyin

கலைக்கடல் சங்கமத்திலே, கலைகள் அரங்கேற்றப்பட்டன.  கலைகள் ஆனந்தத்தை அளிக்கின்றன மனதை மகிழ்விக்கின்றன.   ரசிகர்கள் என்ற வகையிலே நாம் அனைத்தையும் அனுபவித்தோம்.  எங்கே கைத்தட்ட வேண்டுமோ, அங்கே கைதட்டினோம்.   நாம் கவனிக்கத் தவறி இருந்தாலும் கூட, பாராட்டுங்கள் என்று உணர்த்தப்பட்டது.   அப்படியும்கூட நாம் செய்தோம். 

இயல்பாக, இப்போது 22 தேதியன்று, ராம்லலா அயோத்தியிலே வந்த பிறகு, இதன் விளைவாக எப்போதெல்லாம் சந்தர்ப்பம் வாய்க்கிறதோ அப்போதெல்லாம் ஜய் ஸ்ரீ ராம் கோஷம் எழுகிறது.   நான்கு நாட்களில் என்னவெல்லாம் நடந்தன…… அது பற்றி விரிவாக நாம் கேட்டிருக்கிறோம்.  

மிகவும் உற்சாகமாக இருந்தது ஆனந்தமாக இருந்தது.  மிகவும் உத்வேகம் இருந்தது.  அருமையான விஷயம்.   நிறைவு விழாவின் ஒரு பகுதியாக என்றால், உத்வேகத்தைத் தங்களுடைய இதயத்திலே….. பாதுகாப்பாய் வைத்து, உள்ளதைப் உரைக்க வேண்டியிருந்தது.   கைதட்ட வேண்டும் என்பதற்காக நான் கூறவில்லை நீங்கள் கைதட்ட வேண்டாம்.   இப்போது மனவமைதியோடு கேளுங்கள்!! 

சம்ஸ்கார் பாரதி அமைப்பு ஒரு நிலைக்கு வந்து விட்டது என்று நான் கருதுகிறேன்.   அதற்கென ஒரு இடம் கலை உலகத்திலும்  ஏற்பட்டு விட்டது.  அதற்கென ஒரு வல்லமையும் ஏற்பட்டிருக்கிறது.   அந்த வல்லமைக்குட்டு முன்னேற வேண்டுமென்றால், நாம் முன்னோக்கி சிந்தனை செய்ய வேண்டும்.  முன்னோக்கிய சிந்தனை என்பது ஒன்றும் புதிய கருத்து அல்ல.   ஏனென்றால் ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் போது அதன் பின்னணியில் ஒரு இலட்சியம் இருக்கிறது.  செயல் வளர்ச்சியில் பல கட்டங்களை கடக்கும் போது, அதன் போக்கின் திசையில் மாற்றம் ஏற்படுவதில்லை.   செயலின் இலக்கு மாறுபடுவதில்லை.   அந்த வகையிலே, அடுத்த கருத்து என்பது புதிய கருத்து அல்ல.  ஒரு செயலைத் தொடங்கும் முன்பாக கருத்து கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும், ஆனால் முழுமையாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்று கருத முடியாது.  இப்படி சங்கப்பணிகளிலும் கூட நாம் பார்க்கிறோம்.  

1925ஆம் ஆண்டிலே சங்கம் நிறுவப்பட்டது அதற்கு 5 ஆண்டுகள் முன்பாக, டாக்டர் ஹெட்கேவார்….. நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் அமைப்புத் தலைவராக இருந்தார்.  காந்தியடிகள் மாநாட்டின் தலைவராக இருந்தார்.   டாக்டர் ஹெட்கேவார் அப்போது விதர்பா காங்கிரஸின் உறுப்பினராகவும் இருந்தார்.   விவாதப்பொருளைத் தீர்மானிக்கும் குழுவில் முன்மொழிவு என்னவாக இருக்க வேண்டும் என்ற விவாதத்தில், அவருடைய கருத்துக்களும்….. ஏற்றுக் கொள்ளப்பட்டன.  அவரும் இரண்டு முன்மொழிவுகளை அளித்தார்.  இரண்டும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை…. விவாதப் பொருளாக.  ஆனால் அந்தக் காலத்தில் காங்கிரசுக்கு இருந்த கொள்கைப் போக்கினை அனுசரித்தே இருந்தது.   காந்தியடிகள் தலைவராக இருந்தார் டாக்டர்ஜியின் முதல் முன்மொழிவு என்னவென்றால், முழுமையாக பசுவதைத் தடுப்பை முன்னிட்டு காங்கிரஸ் பாடுபட வேண்டும்.   மேலும் 2ஆவதாக, முழுமையான சுதந்திரம், என்ற இலட்சியத்தை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும் அதுவரை காங்கிரஸ் இதைச் செய்யவில்லை.   அதைச் செய்யத் தான் வேண்டும்.   

லோக்மான்ய திலகர். அண்ணல் காந்தியடிகள் எல்லோரும், மனதில் இதையே இருத்திக் கொண்டு பணியாற்றினார்கள் லோல்மான்ய திலகர் கூறியும் இருந்தார், எத்தனை…. கிடைக்கிறதோ அதைப் பெற்றுக் கொண்டு அடுத்த கட்டம் நோக்கிப் போராட வேண்டும்.   சுயராஜ்ஜியம் என்னுடைய பிறப்புரிமை.   மனதில் இருந்ததா என்ற சந்தேகமில்லை மனதில் இருந்தது.  ஆனால் உகந்த சமயத்தில் உகந்த விஷயத்தைப் பேச வேண்டும் என்றால் எது உகந்த சமயம்? 

 இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.   அப்போது காங்கிரஸில் இருந்த மூத்தோர் சுபாஷ் பாபு ஜவஹர்லால் நேரு.  இவர்கள் அந்த நாளைய காங்கிரசின் மூத்தவர்கள்.  டாக்டர் ஹெட்கேவாரின் வயதை ஒத்தவர்கள்.   அப்போது கல்கத்தா காங்கிரசின்….. மாநாட்டிலும் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார் ஆனால் 1920இலே அதற்கும் முன்பாக, டாக்டர் ஐயா கூறினார் முழுமையான சுதந்திரம், இதனை காங்கிரஸ் தனது இலட்சியமாக அறிவிக்க வேண்டும்.  மேலும், சுதந்திரமான பாரதம், அடிமைத்தளையில் பீடிக்கப்பட்டிருக்கும் பிற தேசங்களை விடுவிக்கும். 

இதையும் அவர் அறிவித்தார்.  அதாவது சங்கத்தை நிறுவும் முன்பாகவே டாக்டர் ஐயாவின் மனதிலே தீர்மானித்து விட்டார், அதிலே பாரதம் பற்றியும் சிந்தித்தார், அதோடு பாரத த்தின் தாக்கமுடைய இருப்பு உலகை எப்படிப் படைக்கும், அதற்கான வரைபடமும் அவர் மனதிலே தயாராக இருந்தது.   ஆனால் இவை எதையுமே அவர் சங்கத்தை நிறுவும் காலத்திலே தெரிவிக்கவில்லை.  அவர் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று மட்டும் கூறினார்.  செய்ய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?  தினமும் ஷாகாவிற்கு வர வேண்டும். 

மோரோபந்த் பிங்க்ளே……  நம்முடைய மூத்த காரியகர்த்தர்.   ராம்ஜன்மபூமி இயக்கத்தினுடைய….. வழிகாட்டி அவர்.   அவர் ஒருமுறை பௌத்திக்கின் போது வெகுகாலம் கழித்து கூறினார், அதாவது ஷாகா செல்லும் போது தெரிய வந்திருந்தால், இதையெல்லாம் செய்ய வேண்டுமென்று, அப்போது ஒருவேளை நாங்கள் ஷாகா போவதையே நிறுத்தியிருப்போம்.   டாக்டர் ஐயா இதையெல்லாம் கூறவேயில்லை.   ஒவ்வொன்றாக மெல்லமெல்ல இணைந்து கொண்டன.   சக்தி அதிகரிக்கும் வேளையிலே, செயல்சக்தி அதிகரித்த போது, அப்போது இதைச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.  சக்தி இல்லாத போது பெரிதாகப் பேசினால், அதனால் பயனேதும் கிடையாது.   தத்தோபந்த்ஜி இந்தச் செயல்பாட்டை செயல்முறையை ப்ரோக்ரெசிவ் அன்ஃபோல்ட்மெண்ட் என்று அழைக்கிறார்.   படிப்படியாக வெளிப்படுத்தல்.  

என் கருத்துப்படி இந்த சன்ஸ்கார் பாரதி அமைப்பின் பயணத்திலே, இப்போது நம்மிடம் போதுமான சக்தி வந்து விட்டது நமக்மென ஒரு இடம் உருவாகி விட்டது, நாம் திட்டமிட்ட நீண்டதூர இலக்கு நாம் நினைக்கும் தொலைநோக்கு சிந்தனை, இதன் அடுத்த கட்டத்தை நாம் எட்ட வேண்டும் அதை நோக்கி நாம் பயணப்பட வேண்டும்.  சம்ஸ்கார் பாரதி, கலைத்துறையிலே, மிக முதன்மையான அமைப்பாக, ஆவது உறுதி.  ஏனென்றால் நாம் எப்போதும் விரிவாக்கம் பற்றியே பேசுகிறோம்.   மேலும் ஆதாரபூர்வமாக கலை கலாச்சாரத்தை ஊடகங்களாக கருதி, நாட்டுநலனிலே ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஒருங்கிணைக்க, நாம் பணியாற்றி வருகிறோம்.  ஆகையால் நாம் முன்னேறுவோம் முதன்மை நிலை அடைவோம்.  இதற்காக வித்தியாசமாக எதையும் சிந்திக்கத் தேவையில்லை.  ஆனால் ஏன் பெரிதாக வேண்டும் ஏன் முதன்மையாக வேண்டும்?  ஏனென்றால் நாமனைவரும் பாரதீய கலையுலகில், பாரதீய கலை ஆய்வினை நிறுவ வேண்டும்.  

நாம் கலைஞர்கள், நமது கலையினை வெளிப்படுத்துகிறோம்.  மற்ற கலைஞர்களின் வெளிப்பாட்டினைப் பார்க்கிறோம்.  ரசிகத்தன்மையோடு அதை அணுகுகிறோம்.  நம்முடைய கலையை மிகச் சிறப்பாக அளிக்கிறோம்.  வெறும் கலை பற்றி மட்டும் என்றால் இதோடு போய் விடும்.  ஆனால் இதற்காக ஒருங்கிணைக்க வேண்டாம் நமது கலையின் சாதனை எத்தனை சிறப்பானதோ, அந்த அளவுக்கு சிறப்பிடம் கிடைத்து விடும்.  

ஆனால் கலை, நற்பண்புகளை ஏற்படுத்தவே படைக்கப்பட்டவை.  சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உருவானவை.   எப்படிப்பட்ட சமூகமென்றால், ஒட்டுமொத்த உலகத்தையுமே, ஸ்வம்ஸ்வம் சரித்ரம் சிக்சரண் ப்ருதிவ்யாம் சர்வமானவ:.   நம்முடைய நற்பண்புகளை எடுத்துக்காட்டாக்கி, அதை வாழ்க்கைப் பாடமாக்க வேண்டும்.  அப்படிப்பட்ட மனித சமூகத்தை நம்முடைய தேசத்திலே உருவாக்கியளிக்க, பணியாற்ற வேண்டுமென்றால், இந்த கலையுலகில் சில கலைஞர்களால் மட்டுமே ஒன்றும் ஆகாது.  அனைத்துக் கலையுலகத்தின் பணி இது, அனைத்துக் கலையுலகும் இந்த நோக்கோடு பயணிக்க வேண்டும். 

இன்று இந்த நிலை இல்லை.   கலையின் பங்குபணி என்னவென்றால், சமூக வாழ்க்கையிலே, இந்த உணர்வோடு கலைஞர்கள் கலை சாதனையை செய்ய வேண்டும்.  நாம் என்னவோ செய்கிறோம் சம்ஸ்கார் பாரதியோடு தொடர்பு இருக்கிறது அவர்கள் கருத்து அளித்தார்கள்.  நம்மோடு தொடர்பில் இல்லை என்றாலும் அதே எண்ணப்பாடு கொண்ட பல கலைஞர்களும் இருக்கிறார்கள்.   ஆனால் கலைஞர்களின் ஒரு மிகப்பெரிய எண்ணிக்கையினர், மெய்யான சாதனை என்னவோ செய்கிறார்கள். 

ஆனால் இது வெறும் தனிப்பட்ட பயிற்சி அல்ல.  நம் நாட்டிலே ஒவ்வொரு பயிற்சியும், அவை…. அவரவர் செயல்களின் மாலை, இறைவனுக்கு அர்ப்பணம் செய்யவே பயனாகிறது.  இறைவனை எவ்வாறு வழிபடுவது?  தங்களுடைய, நற்கருமங்கள் என்ற மலர்மாலையை ஏற்படுத்தி, அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது.  மேலும் இறைவன், துரும்பிலும் இருப்பவன்.  விசாலமான விண்ணிலும் இருப்பவன்.  எங்கும் நீக்கமற நிறைந்தவன்.  

அனைத்தும் இறைவனே.  இதைத் தான் மிகச் சிறந்த பாடகர்களும் கூட, தங்கள் கலையை வெளிப்படுத்திய பிறகு கேட்க வந்தவர்களை விழுந்து வணங்குகிறார்கள்.  உள்ளபடியே அவர்களுடைய பாடலைக் கேட்க வந்தவர்கள், அவர்களை இறையாகப் பார்க்கிறார்கள்.  ஆனால் இந்த இறைவன், கேட்க வந்த ரசிகர்களை இறைவர்களாகப் பார்க்கிறார். 

நம்முடைய சமூகம் வழிபடக்கூடியது.  இந்த சமூகத்திலே கலையுலகம் தனது பங்குபணியை ஆற்றினால், அனைத்துக் கலைஞர்களும், இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் இதைப் புரிந்து கொண்டு, தங்களுடைய பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.  ஆக கலைபற்றிய விளக்கம் பாரதீயம் பற்றிய விளக்கமாகி விடும்.  அப்படி இன்று இல்லை.   பாரதீய கலையின் சாராம்சம் என்ன சத்யம் சிவம் சுந்தரம்.   அவர் வாய்மைவழி நடக்கிறார்.  சத்தியத்தை அவர் மறைப்பதில்லை.   ஒளித்து மறைத்து எல்லாம் அவர் பேசுவதில்லை.   உள்ளதை உள்ளபடி, அப்படியே உரைக்கிறார். 

ஆனால் எந்த வகையாக உரைக்கிறார் என்றால், இதைத் தெரிந்த பிறகு, சத்தியத்தைக் கண்ட பிறகு, சிந்தனை முழுக்க சிவத்தை நோக்கித் திரும்புகின்றது.  இப்போது கலையின் கண்ணோட்டம்…. சமூகத்தின்பால் இல்லை என்பதால், சில பொருளற்ற விவாதங்களில் சிக்கிக் கொள்கிறது.  அல்லது, கலையின் கண்ணோட்டம், சமூகத்திலே தன்னுடைய சுயநலத்தை நிறைவு செய்வதற்காக, சமூகத்தைப் பிளவுபடுத்தவல்ல கண்ணோட்டத்தை ஏற்படுத்த திருப்பப்படுகிறது.  13.00  ஏனென்றால், உலகின் 2000 ஆண்டுக்காலக் நிலையைப் பார்த்தால், வாழ்வதற்கான போராட்டம்.  மேலும் பலமுடையவரின் வெற்றி.  பலமுடையவரே ஆள்வார்.  இந்த இரண்டு தத்துவங்களை ஆதாரமாக கொண்டது.  

ஆக இந்தக் கருத்தியல்படியே 2000 ஆண்டுகளாக உலகம் இயங்கி வந்திருக்கிறது.  நிலையை அப்படியே வைத்திருப்பதில் யாருக்கு நன்மையாக இருக்கிறதோ, அவர்கள் சமூகத்திலே ஏதோ வகையான பிரிவினையை ஏற்படுத்தியபடி இருப்பார்கள்.  இதையே முயல்வார்கள்.  சமூகத்திலே கண்ணியமற்றவைகளை முன்னிறுத்துவார்கள்.  கண்ணியமற்றவை என்பது என் கற்பனையில் உதிக்கவில்லை.  அனைத்து உலகமும் இந்தச் சங்கடத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறது. 

கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.  ஆனால் நம்முடைய வாழ்க்கையின் நலன்கள், நம்முடைய வாழ்க்கையின் அமைப்பு, நம்முடைய நடவடிக்கைகளின் ஒழுங்குமுறை, அனைத்தின் மீதும் தாக்குதலை உலகத்து மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.   அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முன்னேறிய நாடுகள்.   வோகிஸம், கல்சுரல் மார்க்ஸிஸம் என அநேக பெயர்களில் இவை முன்னிறுத்தப்படுகின்றன.  ஆனால் இவற்றுக்கும் கொள்கைகளுக்கும் சம்பந்தமில்லை, கையளவு பேர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக, ஒரு கோட்பாட்டை….. கோட்பாடும் இல்லை, பொய்கள் புனைவுகளை உருவாக்கி, அதன் வாயிலாக, நாடுகள் அனைத்தையும் சின்னாபின்னப்படுத்துவது, இதனால் தாங்கள் சுயலாபம் அடைந்து மற்றவர்களை, நிரந்தரமாக ஆட்சி புரிவது.  ஒரு பெரிய கதை உலகிலே அரங்கேறி வருகின்றது.  இதன் மீது புத்தகங்கள் எழுதப்பட்டு வருகின்றன.  

அனைவருமே, இதிலிருந்து மீள்வது குறித்த கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.   கலையின் வாயிலாக நலன்களை நிறுவக்கூடிய கலையின் வாயிலாக சமத்துவத்தை நிறுவக்கூடிய, கலையின் வாயிலாக நல்லிணக்கத்தை நிறுவக்கூடிய பார்வை.   இது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த பாரதம் இந்தப் பார்வையை முன்னிறுத்தி, செயலாற்ற வேண்டும்.   ஏனென்றால் இந்தக் கண்ணோட்டத்தின் பின்னே வாய்மை இருக்கிறது. 

சர்வம் கலு இதம் பிரம்மம்.  எந்த வேற்றுமையும் பாராட்ட வேண்டிய தேவையில்லை.  मातृवत् परदारेषु, परद्रव्येषु लोष्ठवत्।आत्मवत् सर्वभूतेषु.  இது எதன் ஆதாரமாக விளங்குகிறதோ அந்தக் கலாச்சாரத்தைக் கலைகள் வாயிலாக வெளிப்படுத்தும் பார்வை.  அது பலமடைய வேண்டும்.  நம் தேசம் சமூகத்திற்காக, நம்முடைய கலைகளுக்காக இறைவன் விதித்த கடமைப்படி, அதை வெற்றிபெறச் செய்ய, நாம் இதைச் செய்தாக வேண்டும்.  இந்த நோக்கில் கவனத்தைச் செலுத்த வேண்டும். 

அந்த வ்கையிலே சமூகத்திலே தேவைகள் இருக்கின்றன, சமூகத்திலே பிரச்சனைகள் இருக்கின்றன.  இவற்றால் பாதிக்கப்பட்ட, பிரிவினர் இருக்கின்றார்கள்.  அவர்கள் மனதில் வினாக்கள் இருக்கின்றன.  இவற்றை மறுக்க முடியாது ஏற்க வேண்டும்.  இவற்றை நாம் கையாள வேண்டும்.  நம்மால் என்ன முடியுமோ அதைச் செய்ய வேண்டும்.   ஆனால் இவையனைத்தும் சிவத்துவத்தை நோக்கிச் செல்ல வேண்டும், என்றதான கண்ணோட்டத்தை நிறுவ வேண்டும்.  அதன் அழகினை, நம் நாட்டிலே, சிவத்துவத்தோடு மட்டும் அல்லது சத்தியத்தோடு மட்டும்,

நாம் கலைகளின் அழகை அளவீடு செய்வதில்லை.  சத்தியமும் சிவமும் ஒன்றுபோலச் செல்லும் போது தான், கலையின் அழகு மெருகேறும்.  மேலும் சத்தியம் சிவம் சுந்தரம், நம் கலைகளின் அடையாளம்.  இந்தப் பணியை ஆற்ற வேண்டும்.  பணியாற்ற வேண்டுமென்றால், கார்யகர்த்தர்கள் வேண்டும்.  अधिष्ठानं, तथा कर्ता करणं च पृथग्विधम् |
विविधाश्च पृथक्चेष्टा, दैवं चैवात्र पञ्चमम्. 
 

தெய்வம் இருக்கிறது.  அது சரியான காலத்தில் தான் வெளிப்படுகிறது.  ஆலயத்திற்கான போராட்டம் 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது.   ஆனால் ஆலயம் இப்போது தான் உருவானது.  அதனால் தியாகமோ உழைப்போ குறைவாகச் செய்தார்கள் என்பது பொருளல்ல.  அனைவரும் அனைத்தையும் செய்தார்கள், எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவு செய்தார்கள்.  உயிர்த்தியாகங்களையும் புரிந்தார்கள். 

ஆனால், 100 குடம் தண்ணீரை தோட்டக்காரன் ஊற்றினாலும், பருவம் வரும் போது தான் பழம் தரும்.  ஆனால் மேலும்…. 5 ஆவதாக ஒன்று உண்டு தெய்வத்தோடு கூட.  அதோடு.  அதாவது தெய்வத்தோடு கூட மேலும் ஒன்று 5.  அதற்கு முன்பாக நான்கையும் நிறைவேற்ற வேண்டும்.   இதிலே ஒரு கோட்பாட்டு அடிப்படை உள்ளது.  பயணத்தில் நாம் கொள்ள வேண்டிய கண்ணோட்டம்.   அடுத்ததாக….. செயலாற்றும் முறை. 

மூன்றாவதாக, அந்த செயல்முறையை வெற்றியடையச் செய்வதற்கு, அநேக வகையான, முயற்சிகளின் தேவை இருக்கிறது.  ஆனால் இவையனைத்தையும் செய்பவரே கார்யகர்த்தர் அவரே கர்த்தா.   எலிகளின் நாடாளுமன்றம் திடீரென…… கூடியது.  கூட்டப்பட்டது.   ஏன்?  பூனை என்ற ஒரு விலங்கு உள்ளது.   அது நம்மை வேட்டையாடிக் கொல்கிறது.  அப்போது வேறேதும் இருக்கவில்லை. எலிகள் மட்டுமே இருந்தன, எலிகள் காரணமாக உலகம் பீடிக்கப்பட்டது.  ஆகையால் பிரம்மன் பூனையைப் படைத்து அனுப்பி வைத்தார்.   பூனை சீறிப் பாய்ந்தது, அடுத்து என்ன?  ஏகப்பட்ட எலிகள் இதுவோ பூனை.  இதற்கு தினமும் தீபாவளி பொங்கல் தான்.  ஒரு கையால் ஒரு வீச்சு, 4-5 எலிகள் பிடிக்குள் வந்தன.  கொன்று தின்றது.   எலிகளுக்கோ பிராண சங்கடம்.  

ஆகையால் நாட்டாளுமன்றம் கூட்டப்பட்டது.  அனைத்து விதமான எலிகளும் கூடின.  பெரியபெரிய உரைகள் ஆற்றப்பட்டன.  அந்த கலந்தாய்வு முடிவில் ஒரு தீர்மானம் மேற்கொண்டன.   பூனையின் கழுத்திலே ஒரு மணியைக் கட்டுவது.  முன்மொழிவு நிறைவேறியது.  ஓர்மனதாக.  அவையில் இருந்தோருக்கெல்லாம் ஒரே ஆனந்தம் தான்.   பிரச்சனைக்கு முடிவு கட்டியாகி விட்டது.  வழியைக் கண்டுபிடித்தாயிற்று.  கிளம்பத் தொடங்கின.   அப்போது வெளியேறும் வாயிலிலிருந்து ஒரு வயதான எலி வெளிப்பட்டது.  கைகளை அகல விரித்து அந்த வயதான எலி, அனைவரையும் நிறுத்தியது.  நல்ல வேலையை நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்றது, இது சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படும் என்றது.  

ஒரு சின்ன குறையை மட்டும் சரி செய்யுங்கள் என்றது.  அது என்ன என்றன மற்றவை.  மணியைக் கட்டும் எலியின் பெயரையும் இப்போதே தீர்மானம் செய்யுங்கள் என்றது.  தீர்மானிக்கவே முடியவில்லை.  அனைத்தும் தங்கள் கருத்தை உரைத்தன.  ஆகையினாலே தான், ஏராளமான கட்டுக்கதைகள் பிரசுரிக்கப்படுகின்றன.  இப்போதெல்லாம்.   ஆனால் இதுவரை பூனையின் கழுத்தில் மணியைக் கட்டுவது பற்றி பிரசுரிக்கப்பட்டதேயில்லை.  ஏனென்றால் யார் செய்வார்கள் என்று தீர்மானிக்கப்படவில்லை என்றால் வேலை எப்படி நடக்கும்?  ஆகையால் நாம் கார்யகர்த்தர்கள் ஆக வேண்டும்.  நாம் பணியாற்றும் போது ஏகப்பட்ட விஷயங்கள் நடக்கும்.  

ஸ்ரீ இராமன் இலங்கை மீது மாபெரும் போரினைத் தொடுத்த பிறகு வெற்றி கொண்டார்.   பின்னர் தான் வெற்றி கிடைத்தது ஜயித்த பிறகு, வானர வீரர்களோடு கூட புஷ்பக விமானத்தில் அயோத்தி வந்தார்.  அதன் பிறகு அனைவரும் வரவேற்கப்பட்டார்கள்.  அவரவர்க்கு ஏற்ற வகையிலே வெகுமதிகளை வழங்கினார் பலவிதமான கௌரவங்கள்….. எத்தனை பெரிய திருவிழா அது!!  அனைவருக்கும் ஆனந்தம்…. ஒருபுறம் வெற்றியின் ஆனந்தம்.  மறுபுறம் திருவிழா கோலாகலம்.  அனைவரும் அதில் லயித்தார்கள்.  ஆனால் அனுமனோ எங்கும் காணப்படவில்லை.  அனுமன் எங்குமே தென்படவில்லை.  பிராட்டி அவரைத் தேடினார் வரப்பணித்தார்.  அனுமனுக்கு ஒன்று தர வேண்டும் என்று அவருக்குத் தன் மாலையை அளித்தார்.  அனுமனோ அதில் இருக்கும் ஒவ்வொரு முத்தையும் உடைத்துப் பார்க்க ஆரம்பித்தார்.  ஏன் என்று மற்றவர்கள் கேட்க  அவரோ, முத்துக்களுக்காக நான் சேவை செய்யவில்லை.  முத்துக்கள் தாம் இருந்து விட்டுப் போகட்டும்.  இவற்றைக் குறைத்துச் சொல்லவில்லை.  அது முத்துமாலை தான் நான் மறுக்கவில்லை.  ஆனால் சேவை செய்பவர்கள் இதையெல்லாம் கவனிப்பதில்லை.  ஒவ்வோர் முத்திலும் ராமன் இருக்கிறானா என்று பார்த்தார்.  அவர் இதயத்திலே இராமன் குடியிருந்தார் ஒரு நாள் அதைக் காட்டவும் செய்தார். 

வித்யாவான் குணீ அதிசாதுர. பரந்து ராமகாஜ கரிபேகோ ஆதுர.  கார்யகர்த்தரின் கவனம் காரியத்தின் மீதே இருக்கிறது புகைப்படத்தின் மீது அல்ல.  இப்போது பழக்கமாகி விட்டது.  இதுவே ஃபேஷன்.  நாமோ கலையை வழிபடுவோர்.  கலைகளிலே அளிப்பு வெளிப்பாடு, கண்டிப்பாக வேண்டும்.  நிகழ்ச்சியை எப்படி அளிப்பது?  இதன் நல்ல நினைவுகள், புகைப்படமாகப் பாதுகாக்க வேண்டும் இதுவும் ஒரு கலை.  இவையெல்லாம் இருக்க வேண்டும்… சரிதான். ஆனால் காரியகர்த்தருக்கென ஒரு வரையறை இருக்கிறது. 

அவருடைய கவனம் செயல்களின் மீதே இருக்க வேண்டும் அதாவது யார் கார்யகர்த்தா என்றால் காரியங்களைச் செய்பவரே கார்யகர்த்தா.  அப்படிப்பட்ட கார்யகர்த்தர்களாக நாம் ஆக வேண்டும்.  கலை ஒரு சாதனை.  கலை ஒரு திறமை, இறைவனளித்த கொடையாகும்.  அது நம்மிட த்திலே இருக்கிறது.  நாம் அதை வழங்குகிறோம்.   அதைத் துதிக்கவும் செய்கிறோம்.   போற்றவும் வேண்டும்.  ஆனால் அந்தத் துதியை, கேட்க மட்டும் செய்தால், பரவாயில்லை, பார்க்க மட்டும் செய்தால், பரவாயில்லை.  அது ஆழமாகச் சென்றுவிடக் கூடாது தலைக்கேறிவிடக் கூடாது.  இதை அனைவரும், பழகிக் கொள்ள வேண்டும். 

நீங்களனைவரும் கலைஞர்கள், சமூகத்தில் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறீர்கள்.  எங்கள் அமைப்பில் வாத்தியக்குழு பேண்டு வாத்தியம் உண்டு.  சங்கத்தின் தேவைகளுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம்.  ஆனால் அங்கேயும் நாங்கள் பார்க்கிறோம், அதிலே எனக்கு 5 பாடங்கள் தெரியும் இல்லை 12 பாடங்கள் தெரியும் இது தொடர்பாக பரஸ்பர மிதப்பு, ஏற்பட சாத்தியமிருக்கிறது, ஏற்பட நாம் அனுமதித்தால்.  

ஆகையால் நாம், ஒரு வாத்தியத்தில் ஒருவர் தேர்ச்சி பெற்று விட்டால் அவருடைய வாத்தியத்தை மாற்றி விடுகிறோம்.  இப்போது இந்த அனைத்துத் தடைகளும், ஏற்படுவதோடு, நல்ல திறமையாளர்களுக்கு குறிப்பாக ஏற்படுகிறது.  ஆகையால் தான் நான் உங்களிடம் கூறுகிறேன்.   அனைத்து மனிதர்களும், இதன் காரணமாக, இந்த, அகங்காரத்தால் பீடிக்கப்பட்டாலு ம் கூட, இந்த அகங்காரம் அனைவரையும் விட்டுவிட்டாலும், திறமையாளர்களைப் பிடித்துக் கொள்கிறது.   காரியகர்த்தர்கள் இதை விட்டு விலகி கருமமே கண்ணாக இருக்க வேண்டும்.   விடுபட்டவர்களாக இருக்க வேண்டும்.  அவர்கள் ஏற்பாடுகளோடு ஒன்றிவிடக் கூடாது.  அவசியமானால் அவர்கள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள்.  தேவைப்படும் வரை பங்கேற்பார்கள்.  

தேவை முடிவுக்கு வந்தால், பங்கேற்பும் முடிந்து விடும்.   அடுத்து யார் பணியாற்ற வேண்டுமோ அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.  எனக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை நான் கவனிப்பேன்.   இதைத் தான் தொடர்ந்து பழக வேண்டும்.  நான் என்னுடையது என்று கிடையாது.  சம்ஸ்கார் பாரதி என்ன தீர்மானிக்கிறதோ அதுதான்.   இடம் பெயர் புகழ் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லை.   சங்கத்திற்காக இடம் பெயர் புகழை ஏற்க வேண்டும் என்றால், அதையும் ஏற்பேன்.  ஆனால் அதிலிருந்து விலகி இருப்பேன்.  நான் விலகி இருப்பேன். 

அமைப்பு என்னை அமர வைத்திருக்கும் இடத்தில் ஒன்றைச் செய்ய வேண்டுமென்றால், அங்கு இருப்பது, அவசியமானது என்றால், மேலும், அதைப் பொறுத்துக் கொள்வது அவசியமானது என்றால், அதை நான் பொறுத்துக் கொள்வேன்.  ஆனால் இது என்னுடையது இல்லை.   எனக்கு அந்த முத்து தேவையில்லை.  எனக்கு இராமனிடம் தான் வேலை.  அப்படிப்பட்ட மனிதர் ஒருவர் இருந்தால், அவர் தான், கார்ய கர்த்தர் என்போம். 

மேலும் செயல்களில் தடைகள் ஏற்படுகின்றன.  நான் செய்யும் அனைத்துச் செயல்களிலும் வெற்றியே கிடைக்குமா, அப்படி ஒன்றும் இல்லை.   ஒவ்வொரு முறையும் செயல்களை, புகுந்து செய்ய வேண்டுமா என்றால் அப்படியும் இல்லை.  தன்னுடைய பராக்கிரமத்தைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும் விருப்பம் இருப்பவர், அவர் எங்கே நுழையத் தேவையில்லையோ அங்கேயும் நுழைந்து விடுகிறார்.   அல்லது ஏதோ காரணத்தால், அவருக்கு என்று ஒரு புகழ் பராக்கிரமம் கிடைத்து விட்டால், அவர் பணிய மாட்டார், உடைந்து விழுந்தாலும் கூட பணிய மாட்டார்.  இதற்கும் ஒரு வழக்கு உண்டு இதற்கும் ஒரு ஆதர்ஸம் உண்டு.   அதுவும் கூட பின்பற்றக்கூடிய ஒரு விஷயம் தான்.  

ஆனால், எப்போது என்றால், செய்யப்படும் காரியம் அவரை விட மகத்தானதாக இருக்கும் வேளையில்.   சிவாஜி மகராஜுக்கு தோன்றியது சுயராஜ்ஜியத்தை பெற வேண்டும் என்று சொன்னால், முதுகைக் காட்டி ஓடி ஒளிவது அவசியம் என்றால், அவர் கொஞ்சமும் கூச்சப்படவேயில்லை.  சுயராஜ்ஜியத்தைப் பாதுகாக்க, நான் உங்களுடைய சேவகன் என்று ஔரங்கசேபுக்கு கடிதம் எழுத வேண்டும் என்றால், அப்படியொரு கடிதத்தை எழுத அவர் கூச்சப்படவில்லை.   இலக்கு சிவாஜி மகராஜுக்குத் தெளிவாக இருந்தது.   ஆனால் அதற்கான கொள்கை, மேற்கொண்ட காரியத்திற்குப் புகழ் சேர்க்கும் திசையில் கொண்டு செல்வது.   என்னுடைய சொந்த புகழ் அதனால் அதிகமாகுமா குறையுமா, இதைப் பற்றி அவர் சிந்திக்கவேயில்லை.  

ஆகையால் இந்தக் காரணத்தால், அஃப்சல்கான் என்ற ஒரு சங்கடம் அவருக்கு ஏற்பட்ட போது, அப்போது புத்திகூர்மையோடு புரிந்து கொண்டார், களத்தில் அவனோடு மோதுவது சாத்தியமில்லை, எல்லாம் நாசமாகி விடும் என்று.  சுயராஜ்ஜியம் மண்ணோடு மண்ணாகி விடும் என்று.   ஆகையால் அவர் அவனை, சமவெளியிலிருந்து வெளிப்படுத்தி, மலை-காடுகளில் வரவழைத்தார், முழுமையாக அழித்தார்.  இதற்குள்ளாக பெரும் அவப்பெயர் ஏற்பட்டு விட்டது.   மக்கள் பலவாறாகப் பேசினார்கள் அவரும் சகித்துக் கொண்டார்.   ஏனென்றால், தூற்றுதலோ, போற்றுதலோ இவற்றோடு எனக்கு என்ன சம்பந்தம்? 

निन्दन्तु नीतिनिपुणा यदि वा स्तुवन्तु. 
लक्ष्मी: समाविशतु, गच्छति वा यथेष्टम् ।   अद्यैव वा मरणमस्तु, युगान्तरे वा,
न्याय्यात्पथ: प्रविचलन्ति पदं न धीरा: ।। 

சத்தியம்-நியாயத்துக்குட்பட்டு எந்தப் பாதையை ஏற்றிருக்கிறோமோ அந்தப் பாதையை விட்டு,  நாம் சற்றும் விலகிச் சென்று விடக்கூடாது.  இதை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள், போற்றுதல் தூற்றுதல், செல்வம் ஈட்டுதல் கௌரவிக்கப்படுதல் இல்லையென்றாலும் கூட, கேடு விளைந்தாலும், பயணிக்கும் போது மரணமேற்பட்டாலும், மரணத்தையொத்த வாழ்கையை வாழ நேர்ந்தாலும், ஆனால் இவ்வாறு நடந்தால், நாம் கொண்ட பாதையிலேயே செல்லுவோம்.  சமநிலை, பொறுமை, உற்சாகமும் வேண்டும்.  உற்சாகம் இல்லாமல் பணியாற்ற முடியாது.   ஆனால் உற்சாகத்திற்கும் ஒரு தேவை உண்டு, காரியம் உன்னதமாக இருக்க வேண்டும், இது தான் உற்சாகத்துக்கான தேவை.   இல்லையென்றால் காத்திருக்க வேண்டியிருக்கும்.   இதன் பிறகும் கூட, வெற்றி தோல்விகள் பாதிக்காமல் இருக்க வேண்டும்.   எல்லா செயல்களும் வெற்றியிலேயே முடிவடைவதில்லை.  தொடர்ந்து பணியாற்றி வர வேண்டும்.   ஆகையால் முழுமையாக முயற்சிகளில் கசடில்லாமல் ஈடுபட்டால், காரியம் நமது கைகளில், பலன் இறைவன் கைகளில்.  

இப்படிச் செல்ல வேண்டும்.   லோக்மான்ய திலகர் மாண்டலே சிறையில் 6 ஆண்டுகள் கழித்தார்.  திரும்பி வந்து பார்த்தால், எத்தனை விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தாரோ, அத்தனையும் நீர்த்துப் போயிருந்தன, யாருமே கூட இல்லை.  28.21அடுத்த நாளே கேசரியில் அவர் கட்டுரை எழுதினார், புனஸ்ச ஹரிஓம்.  என்ன இது இப்படி ஆகி விட்டதே என்று, அவர் சோர்ந்து போய்விடவில்லை.  இது தான் பாதை இப்படித் தான் செய்ய வேண்டும் அப்படியே செய்யவேண்டும், என்று ஆரம்பத்திலிருந்து தொடங்கினார்.  அப்படியே செய்தார்.  கார்யகர்த்தர்களும் கூட தங்கள் நோக்கத்திற்காக சாதனையில் ஈடுபட வேண்டும்.  ஒவ்வொரு கணமும் இதை கவனத்தில் கொண்டு நமது நடவடிக்கைகளில் நாம் ஈடுபட வேண்டும்.   நமது செயல்பாடுகளின் அடிப்படையில் நமது அமைப்பின் சகபயணிகளையும், நமது நடவடிக்கைகள் நட்பின் மூலமாக அவர்களையும் நம்மைப்போல மாற்றியமைக்க வேண்டும்.  அமைப்பினுடைய மெய்யான வலிமை, எண்ணிக்கையில் அல்ல.  அதன் மற்ற குணங்களும்கூட அல்ல. 

அடிப்படையில் மூன்று விஷயங்கள் தாம்.  கொள்கைப்பிடிப்பு.  கொள்கை என்பதே பிரதானம்.  அதேபோலத் தான் ஒழுங்குமுறையும்.  என்னதான் சிறப்பாக நான் செயல்பட்டாலும், அணியில் இருந்தாலும், ஒவ்வொருமுறையும் நானே வருவேன் என்பதல்ல, கேப்டன் யார் என்ன செய்வார்கள் என்று கூறுவதுபடியே நடக்கும்.  நான் ஒழுங்குமுறைப்படி நடப்பேன் எனக்கு என்ன கூறப்படுகிறதோ, அதை ஏற்று நடப்பேன்.  ஆனால் இந்த ஒழுங்குமுறை எப்படிப்பட்டது?  இது திணிக்கப்பட்டது இல்லை ஏனென்றால், கொள்கைப்பிடிப்புகூட, தீவிரப்போக்கை ஏற்படுத்துகிறது, ஒழுங்குமுறைகூட, தீவிரப்போக்கை ஏற்படுத்துகிறது, ஆனால் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.  ஆனால் ஏன் புன்முறுவலோடு ஏற்கிறார்கள் என்றால், ஆத்மார்த்தமான ஒரு இணக்கம் ஏற்படுகிறது.  இதை அனைவரும் செய்கிறார்கள், அன்போடு.  நமது தொடர்புகள் ஆத்மார்த்தமாக இருக்கட்டும், பரஸ்பர அன்போடு ஒருவரோடு ஒருவர் பழகலாம், ஒருவரை ஒருவர் முன்னேற்ற செயல்களை, ஆற்றுவோம், காழ்ப்பு எரிச்சல் பொறாமை ஏதும் இல்லாமல் இருப்போம், இப்படியாகப் பழகுவோம்.  இதற்கு முக்கியமானதான குரல் தேவை.  இதற்கான மனம் வாக்கு வேண்டும்.  அதனடிப்படையிலே, நமது செயல்களுக்குத் தேவையான ஒழுங்குமுறையை நாமும் பின்பற்றி மற்றவர்களையும் பின்பற்றச் செய்வோம்.  நமது கொள்கைகளை முன்னிறுத்தி முன்னேறிச் செல்வோம். 

இது தான் நமது பலம்.  இந்த பலத்தின் துணையோடு நாம் பயணித்தால், வேறு யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை.  நாம் கவலையே இல்லாமல் பயணிக்கலாம்.  யாருடைய தயவையும் நாடத் தேவையில்லை.  இந்த வகையிலே நாம் பயணிக்க வேண்டும்.  அப்போது தான் நாம் நமது இலக்கை அடைய முடியும்.  நாம் இந்த பலத்தை அடையும் நிலையை எட்டிக் கொண்டிருக்கிறோம்.  இதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.  இதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.   இதன் அடிப்படையிலே நமது சமூகத்திலே, இருக்கும் பலவகையான கலைஞர்களை, அவர்களை இணைக்க வேண்டும். 

சமூகத்திலே பலவகையான, பிரச்சனைகள் இருக்கின்றன.  கலைவாயிலாக அவற்றுக்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும், மேலும் சமூக கண்ணோட்டம் மாற வேண்டும், அனைவருக்கும் இடம் கிடைக்க வேண்டும், நம்மைவிட்டுப் போனவர்கள் திரும்பி வர வேண்டும், இவையனைத்தும் அந்த விழிப்பின் மூலம் ஏற்படுத்தப்பட வேண்டும், அப்படிப்பட்ட விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும், இதற்கென பிரத்யேகத் திட்டங்களை நாம் கைக்கொள்ள வேண்டும்.  இந்த வழியில் பயணித்து நாம் முன்னேறினோம் என்று சொன்னால், கலை கலாச்சாரத் துறையினிலே, பாரதத்தின் முன்னெடுப்பு நிறுவப்பட்டு, உலகம் முழுவதற்கும், அவர்களுக்காக ஒரு புதிய முன்னெடுப்பு அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலே, ஒட்டுமொத்த உலகிலுமே, மங்கல விஷயங்களை படைத்தளிக்கும், அமுதப்பெருக்கினை உருவாக்கும். 

மனம் வாக்கு செயல்களினால், உலகம் அனைத்தும் நாகரிகம் உடையதாய் உருமாற்றும்.   உலக சகோதரத்துவத்தை ஏற்று பயணிப்போம், அனைவரையும் ஒன்றிணைப்போம், அனைவரையும் அரவணைத்து முன்னேறுவோம்.  ஆக, விஸ்வகுருவான பாரதம், அனைவரும் மகிழ்வாய் எந்த நோய்நொடியும் இல்லாமல், அனைவரும் மங்கலங்களையே காணட்டும் யாருக்கும் துக்கமே இருக்க கூடாது. 

இப்படிப்பட்ட உலகத்தை நிர்மாணம் செய்யப்படுவதை, இந்த விஷயம், செய்யப்படுவதை, நடைமுறையாவதை, நாம் நம்முடைய இந்த வாழ்க்கையிலேயே கூட காண முடியும்.  அந்தத் திக்கில் நாம் பயணிக்க முடியும்.  அந்த அளவுக்கு நாம் பலமடைந்திருக்கிறோம், என்று கூறி அமைகிறேன், நன்றி வணக்கம்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories