மராத்தான் என்ற பெயரில் நூதன கொள்ளை… அடிக்கும் கலரில் தீடீர் என முளைக்கும் ப்ளக்ஸ்கள், போஸ்டர்கள்.. அதில் உள்ள தகவல்.. நெஞ்சை காக்க ஓட்டம், குஞ்சை காக்க ஓட்டம் , உறுப்பு தானம் ரத்த தானம் வலியுறுத்தி ஓட்டம் என ஏதாவது ஒரு பெயரில் ஓட்டம் …
இந்த மாதம் இந்த தேதி இந்த ஞாயிற்று கிழமை… 5 கி.மீ ஓட்டம்…10 கிமீ ஓட்டம் …. இந்த இடம் இந்த நேரம் என..,
நடத்துவது யார் என பார்த்தால் நகரின் மிக பெரிய வசதியான மருத்துவ நிறுவனங்கள்.. இதற்கு வரிசை கட்டும் மீடியா பார்டனர்கள்,ஸ்பான்சர்கள்…
3 மாதம் முன்பே திட்டமிட்டு பள்ளி கல்லூரிகளில் சென்று அனைவரும் கலந்து கொள்ள வலியுறுத்தல்… ஓடுனா உங்க ஒடம்புக்கு நல்லது ,ரத்த தானம் உடல் உறுப்பு தானம் அல்லது இன்னபிற விழிப்புணர்வுக்காக என பில்டப்..
நம்ம உடம்பு மேலே இவனுங்களுக்கு இவ்வளவு அக்கறையா என பார்த்தால் ..அங்க தான் ட்விஸ்ட்டே.. நுழைவு கட்டணம் என 100 ல் தொடங்கி 500 வரை ..
அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் கூட்டமாக கலந்து கொள்ளச் சொல்லிடுவாங்க.. .இவனுங்களுக்கு என்ன உள்குத்தோ… நமக்கு தான் கூட்டமா எது நடந்தாலும் சரி என்ற மனபோக்கு எண்ணம் உண்டே..
ஒத்த டீ சர்ட் தந்துடுவான் நடத்துறவன் விளம்பரத்துடன்… கலந்து கொள்ளும் மக்குகள் ஏன் ஓடறோம் எதுக்கு ஓடறோம் என்ற அறிவு இல்லாமல் அவன் வியாபார பசிக்கு இதுகள் தீனியாகிறது…
இதில் பரிசாக சொற்ப பணம்…அதிக பட்சம் முதல் மூன்று இடங்களுக்கு..
கணக்கு பண்ணுங்க….. கடந்த ஞாயிறு திருச்சியில் 10000 த்துக்கும் அதிகமான பேர் கலந்து கொண்ட பிரம்மாண்ட மராத்தான்…தலைக்கு 100 ( இது குறைந்த பட்சம் ) ஒரு டீசர்ட்….வழியில் குடிக்க வாட்டர் பாக்கெட்…இது தான் செலவே ….கூட்டி கழிச்சு பாருங்க லாபம் யாருக்கு என….
நீங்க போஸ்டர் பார்த்து இருப்பீங்க வெறும் மொபைல் நம்பர் போட்டு ஒய்வு பெற்றவர்களுக்கு வேலை … அரிய வாய்ப்பு ..கால் பண்ண அவன் வர சொன்ன இடத்துக்கு சென்று உங்க பயோடேட்டா வாங்கி வைத்து கொண்டு 250 நுழைவு கட்டணம் கட்டிட்டு போங்க வீட்டுக்கு லெட்டர் வரும் என பத்தி விட்ருவான்..அதறக்கு பிறகு காலும் வராது கையும் வராது…இது ஒரு கொள்ளை..
அதறக்கு சற்றும் குறைவில்லாத வெளியே தெரியாத ஓயிட் காலர் கொள்ளை பெருகி வரும் இந்த மராத்தான் ஓட்ட கொள்ளை…
– மச்சேந்திரன் புகழ்




