இன்று ஐப்பசி பௌர்ணமி. மிகவும் விசேஷமான நாள். பௌர்ணமி ஐப்பசி மாதத்தில் சிவபெருமானுக்கு உகந்ததாக போற்றப்படுகின்றது
இன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படும்! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலையானே போற்றி ! ஓம் நமச்சிவாய உலகையாளும் இனிய நாமம் ஓம் நமச்சிவாய!
எண்ணும் எண்ணத்திலும் எழுதும் எழுத்திலும் உயிர்ப்பாய் இருப்பார்! உண்ணும் அனைத்திலும் இருப்பார் ஆண்டவர்! இந்நாளில் குடும்பத்துடன் சிவனின் அன்னாபிஷேகக் கோலத்தை தர்சித்து அங்கு வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி உண்பது மிகமிகச் சிறப்பானது.
சிவன் அபிஷேகப் பிரியர். இந்த நாளில் செய்யும் வழிப்பாட்டால் உணவு நிறைவாக கிடைக்கும் வரமும், உடல் ஆரோக்கியம், செல்வவளம் பெறலாம். இறைவன் சிவபெருமானின் சிவலிங்கத் திருமேனியை அன்னத்தினால் பச்சரிசி தோற்றத்தால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் எங்கின்றோம்
திருமூலர்: அண்டத்திலுள்ளதே பிண்டம் பிண்டத்திலுள்ளதே அண்டம் என்கிறார். நமது பேரண்டம் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு என்ற பஞ்ச பூதங்களால் ஆனது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்பது போல் நமது உடல் ஐந்து பூதங்களால் ஆனது.
பஞ்ச பூதங்களை சிறப்பித்து அண்டத்திலுள்லோர் அனைவருக்கும் உணவும், நீரும் நிறைவாக கிடைக்க ஈசனை வணங்கி அவருக்கு அன்னாபிசேகம் செய்து வழிபடும் பழக்கம் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் நடத்தப்படுகின்றது. அன்னம் அண்டத்திற்கு அவசியமானது என்பதையும் அதன் முக்கியத்துவம் எங்கும் உணரப்பட வேண்டும் என்றும் வருடம் ஒரு முறை மட்டுமே நடத்தப்படும்.




