மழையால் கைவிடப் பட்ட வங்க தேசம்-இலங்கை மோதும் போட்டி!

லைஃப் ஸ்டைல் விளையாட்டு

bangladesh srilanka - 2026

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் மழை காரணமாக வங்கதேசம் – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 16வது லீக் போட்டியில் வங்கதேசம் – இலங்கை அணிகள் மோத இருந்தது. இந்தப் போட்டி பிரிஸ்டல் நகரில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.

ஆனால் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் மழையின் அளவு குறையாததால் டாஸ் போடாமலே ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதை அடுத்து, இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் இலங்கை அணி தற்போது 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் அணி 3 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டாஸ் போடப்படாமலே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.