December 6, 2025, 9:37 AM
26.8 C
Chennai

ஸ்ரீராமாநுஜர் இருபது

ramanujar - 2025

ஸ்ரீராமாநுஜர் இருபது

எம்பெரு மானார்க்கே தோய்ந்த இதயத்துச்
செம்பொருள் நாட்டம் சமைந்ததுவால் – நம்பெருமாள்
ஈந்தவருள் ஈண்டு திருவருளாம் என்றிங்குப்
போந்த இருபதுவெண் பா.

*

தெண்ணீர பொன்னித் திரைகலங்கும் காலத்தே
உண்ணீர்மை ஊட்ட உலகிதனைக் – கண்ணீரால்
காத்த குணவாளன் கோத்தநெறி கூர்வதினால்
பூத்துவரும் புத்துலகு பார்.

பாரோர் பலரோய்ந்து பானாள் விளக்கானார்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் காதலித்த
ஏரார் எதிராசர் எங்கள் கதியானார்
ஓரார் எவரிதனை ஓர்ந்து.

ஓர்ந்து உவப்புற்றார் உத்தமர்க்கே ஆளானார்
சோர்ந்து தவிப்புற்றால் செய்வதெவன் – சீராரும்
செந்நெல் கவரியிடும் சங்கத் தமிழ்ச்செல்வர்
இந்நாளில் இன்புற்றார் ஈண்டு.

ஈண்டு புலர்ந்ததுவோ ஈருலகம் ஒன்றாமோ
மீண்டும் சிறந்திடுமோ மாநெறியும் – நீண்டதன்
தாளால் உலகளந்த தண்மைதான் இவ்வுலகில்
வாளா விருந்திடுமோ தான்.

தானாய்த் திரிவார் தறுகண்மை யால்தரணி
பான்மை இழந்த பசப்பறவே – பூன்றநற்
பொற்குணத்தான் சிற்குணத்தின் செம்மை புலத்தி
நற்குணர்த்தும் ஏந்தலவன் நூல்.

நூல்நுவன்ற மாட்சியோ மால்பயின்ற நெஞ்சதோ
ஆல்துயின்ற சேய்வயிற்றில் அண்டமெல்லாம் ஆன்றபோல்
கால்பயின்ற திக்கெலாம் கார்பயின்ற ஓரருள்
கோல்பயின்று நின்றதாம் கோயில்.

கோயில் மணவாளர் கொள்ளைகொளும் நெஞ்சத்தை
வாய்மொழியில் தாமிழந்தார் வார்த்தைக்கே – ஆயும்
அறிவுடையார் அந்தண்மை ஆளும் தமிழில்
செறிவுடையார் செய்தவமே தாம்.

தாமுகந்த தெவ்வுருவம் நன்றாய்த் தமருக்கே
தோமற்ற ஓருருவில் தோன்றியிவண் – தாமாய்த்
திரமாய்த் திருவரங்கம் தீர்ந்த நிலையாய்
வரம்தரும் வான்குரு வந்து.

வந்தார் வருகவென்று வாராரும் வந்துவப்ப
செந்தமிழ்க் கோதையும் செப்பினாள் – அந்தமிலா
ஆர்வத் தமிழ்க்காதல் ஆன்றமறை அண்ணர்தாம்
ஓர்ந்திட்ட திட்டம் உரை.

உரைகொள் திருமொழிகள் உள்ளுவக்கும் ஈடால்
உரைசால் திருவாய் மொழிக்கே – கரைகடந்த
அன்புற்றார் ஆன்றதமிழ்ச் சொல்லுற்றார் சிந்தையினில்
மன்னிடவே இங்குற்றார் மீண்டு.

மீண்டுவந்த ஊமன் மொழிந்திட்ட வார்த்தையே
யாண்டும்கொள் நெஞ்சேநீ யெவ்விடத்தும் – பாண்டவர்க்காய்த்
தேர்நடத்தும் தாமோ தரனார்ப் பெருவார்த்தை
நேர்நடத்தும் ஆசிரியன் நன்று.

நன்றுரைத்தான் தீந்தமிழைத் தெய்வ மொழியென்றான்
மன்றுரைத்து மண்ணுலகில் மன்னவைத்தான் – என்னுரைப்போம்
கன்றுரைத்த கால்மாற்றும் தீங்குழலார் கண்ணற்கே
அன்பூறும் பண்புடையோ மால்.

மாலாகி நெஞ்சம் மகிழ்ந்திடவே மன்னுதமிழ்க்
கோலோச்சும் கொள்கைத்தாய்க் கொண்டாட்டம் – வேலோச்சும்
வீசுவிழி மாதர் விறல்நேச மாமல்லர்
ஆசறவே கொண்டான்தான் ஆள்.

ஆட்கொண்டான் ஓரரங்க மாளிகையை அன்புகொண்டே
ஆட்கொண்டான் ஊமைதனை ஆர்கழலால் – வேட்டிருந்த
மாமறையோர் கூரேசர் மன்னும் சொலவுகற்றார்
காமுறுவர் கல்லா நெறி.

நெறிநின்ற நின்மலர்க்கே போயொளித்துக் காட்டில்
முறிவெண்ணை உண்டொளிக்கும் பத்தி – வெறிகமழும்
நம்மாழ்வார் சொல்லாரும் நற்பொருளே நாட்டியெழும்
அம்மாநல் பாடியத்தின் மாண்பு.

மாண்புறுநல் சிந்தை மகிதலத்தின் வாழ்ச்சிக்கே
சேண்குன்ற நாடர் சிறந்தவரம் – பாண்மிழற்றும்
வண்டூது போதலரும் வாய்ப்பினால் வாய்மொழிக்குள்
கண்டுழாய்க் கோலம் பயில்.

பயின்றும் துயின்றும் பயந்தும் புலர்ந்தும்
செயிர்க்கும் உயிர்கட்கே சேமம் – நயக்கின்ற
தாயாய்த் தமப்பனாய் எல்லாம் திருமாலாய்
ஆய்ந்துரைத்தான் ஐயன் இனிது.

இனிதாகும் இவ்வுலகு அவ்வுலகும் நன்றே
புனிதராய்ப் போந்தார் பொலிய – மனிதரே
வாழ்ந்தார் எனநயக்கும் விண்ணும் வரக்கண்டு
வாழ்த்தும் முதல்தாய்ப் பொலிவு.

பொலிந்தது பூதூர் புகழ்மலி கச்சி
பொலிந்தது பொன்னரங்கம் வேங்கடம் பூத்துப்
பொலிந்தது பூமி புலர்ந்தது வாழ்வு
பொலிந்தது பாரத நாடு.

நாடுவார் நாற்பயன் தேடுவார் நன்மையே
கூடுவார் கோயின்மை கொள்ளுவார் – பாடிய
சேண்பொருள் சிந்தை அருளிச் செயலதாம்
கோனெதி ராசர்தம் காப்பு.

  • கவிதை: ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories