
“அகிலமெலாம் பின்னே”
(மீ.விசுவநாதன்)
ஆண்டவனின் மாதம் – இது
ஆண்டாளின் மாதம் – தமிழ்ப்
பூண்டவளின் நாவில் – திரு
பூத்திருப்பான் மாலன்.
ஆலயங்கள் யாவும் – அந்த
ஆதியினைப் பாடும் – ஒளி
நீலநிற வானம் – கண்ணன்
நித்தியத்தைப் பேசும்.
வண்ணவண்ணப் பூக்கள் – மணி
வண்ணனழ காகும் – எனக்
கண்ணிலொற்றிக் கொண்டால் – மனக்
கவலையோடிப் போகும்.
போகியோகி யாவான் – சிறு
பொறிதெரிந்த உள்ளே – அதாய்
ஆகிப்போன பின்னே – இந்த
அகிலமெலாம் பின்னே.