நீயும் நானும்… அன்பால் வளர்த்த காதலைவிட… நம் கோபங்கள் நமக்குள் வளர்த்த காதல் அதிகம்! உனக்கும் எனக்கும் விருப்பத்தால் மனசு ஒட்டியதை விட நம் வெறுப்புகளால் நமக்குள் வளர்ந்த காதல் அதிகம்! காதலின் இலக்கணமாய்.. எப்போதும் உழலும் உன் நினைவுகள்… ராதையும் மீராவுமாய் இல்லாமல்… கம்சனும் சிசுபாலனுமாய்! கோபமும் வெறுப்பும்கூட உன்னையே என் நெஞ்சில் உழலவைத்துக் கொண்டிருக்கிறது! அட.. இதென்ன காதல்?! என்னில் உன்னையும் உன்னில் என்னையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாய்… கோபம்!
உன்னிலும் என்னிலும் பிரதிபலிக்கும் ஆடி !
Popular Categories



