
— கவிஞர் கண்ணன் திருமலை அய்யங்கார்—
சுற்றியுள்ள நாடெல்லாம் கலவரத்தால்
சீர்கெட்டு சிதைவுற்றுப் போவதைப்போல்
பற்றிமெல்ல பாழ்நிலமை பாரதத்தும்
புகுந்துவிட கனவில்சிலர் மூழ்கியுள்ளார் 01
கிட்டாத பதவிசுக ஏக்கத்தாலே
கிறுக்கர்போல் பேசுகிறார் மண்பற்றின்றி,,,
எட்டாத ஆட்சிகட்டில் வெறுப்பினாலே
இயக்குகிறார் வன்மத்தை உறுபொருப்பின்றி.,,02
மோதிபுகழ் முகில்திரளாய் வானிலுலவ
மோதிசெயல் புவித்தலைவர் கைகள்தழுவ
மோதிதிட்டம் அகிலத்தார் நெஞ்சம் மகிழ
மோதிஜோதி உலகிருளின் கருமைவிலக்க 03
பிடிக்காதார் எதிர்த்துபழி போடுகின்றார்
பிரச்சனைபோ ராட்டவிதை தூவுகின்றார்
துடிக்கின்றார் துவள்கின்றார் நாசம்விளைக்க
துரோகிகளாய் உள்நாட்டு பகைவர்சிலர் 04
பொட்டலம்போல் எதிரணியை கட்டிவிட்டாய்
புழுக்களென பகைநாட்டை நெளியவிட்டாய்
கட்டெறும்பு போல்மக்கள் உனதுபின்னே
கதிரவன்போல் நிதமொளிர்ந்து நாடுமின்னும் 05
மூக்கணாங் கயிறிட்டால் காளையடங்கும்
முன்காலை அதிலிணைத்தால் கொட்டமடங்கும்.
தீக்குணத்தை நன்கறிவான் டீக்கடைகாரன்
தேசத்தை காப்பாற்றும் முதல்சேவகன்! 06
வீழ்ச்சிகளை மீட்டெடுக்க உறுதிபூண்டாய்
விரைவாக பாரதத்தை உயர்த்திவிட்டாய்
சூழ்ச்சிகளின் வலைபின்னும் விரோதிகளை
சொல்லாமல் சொல்லி,அடி பின்னிவிட்டாய் 07
ஏற்றசில சங்கல்ப்பம் நடத்தினைநீ
இந்தியர்க்கு உலகாருள் முதலிடம்தான்
வீற்றிருக்கும் தாழம்பூ வாசம்போல
வெளித்தலைவர் வியக்கும்வகை உன்முகம்தான் 08
பொன்னாளாம் நீபிறந்த இன்றையநாள்
போரொழிந்து வளர்ச்சிமிக கூடும்நாளாம் !
நன்னாளாம் நரேந்திரன் ஜனித்தநாளாம்
நானிலத்தில் சாந்தநிலை பெருகும்நாளாம் !! 09





