திமுக., தலைவர் ஆகிக்கொண்ட கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக., தலைவர் ஆக்கிக்கொண்ட  மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தாய் உள்ளத்துக்கு இன்று அகவை – 96 !
இந்த நாளில் ஒரு பழங்கவிதை..!தாய் உள்ளமே!
தந் தாய் கள்ளமே!

ஆரூர்ப் பிறந்தாய்
அயலூர் வந்தாய்

எழுத்தினை எடுத்தாய்
கதைபல வடித்தாய்

அரசியல் கலந்தாய்
காழ்ப்புணர்வு விதைத்தாய்

கட்சியைப் பிரித்தாய்
ஆட்சியைப் பிடித்தாய்

இமயமென வளர்ந்தாய்
இருக்கையில் அமர்ந்தாய்

வளமையில் சிறந்தாய்
உறவுகளை வளர்த்தாய்

விதேசிகளைப் புகழ்ந்தாய்
சுதேசிகளை இகழ்ந்தாய்

வடக்கினைக் காத்தாய்
இனத்தமிழ் இழந்தாய்

இலவசத்தை எறிந்தாய்
சுயமரியாதை எரித்தாய்!

வலியோரை வணங்கினாய்
மெலியோரை எதிர்த்தாய்

சமாதிக்குள் அமிழ்ந்தாய்
பகுத்தறிவை அழித்தாய்

இன்னும்…

இத்தாய் எத்தாய்
உம்மேல் பித்தாய்
யாமிருக்க…

கள்ளமே
தந்தாய் உள்ளமே!
தாய் உள்ளமே!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...