
தற்பொழுது ஓரிரு படங்களில் பிசியாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் மறுபடியும் அரசியல் விவகாரங்களில் கவனத்தை திருப்பியிருக்கிறார் ரஜினி

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டவர், அதிரடியாக ‘மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனன் போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜூனன் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்!’ என்று சொன்னார். இதனால் இது வலைதளங்களில் வைரலாகி விமர்சனத்துக்கு உள்ளானது.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு வெளிப்படை ஆதரவு தந்ததோடு, கூடிய விரைவில் தனது புதிய கட்சி துவங்க இருப்பது குறித்த முறையான அறிவிப்பு வெளிவருவது பற்றி அறிவிக்கப்படும், இந்த போயஸ்கார்டன் மீண்டும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள்….என்று எழுந்த விமர்சனத்துக்கு பதில் கொடுத்தார் ரஜினி.

இது அவர் எதிர்பார்த்ததை விடவும் மிகப் பெரிதாக தமிழக அரசியலில் வெடித்தது. இந்த நிலையில், ரஜினி அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது! அவர் தமிழக பா.ஜ.க.வுக்கு தலைமையேற்பாரா? இதன் மூலம் அ.தி.மு.க. – பா.ஜ.க. ஆட்சி அமையுமா? என்று மீடியாக்கள் விவாதங்களும், அரசியல் கட்டுரைகளுமாக தூள்கிளம்பிற்று அரசியல் விவகாரம்.
ஆனால் அதேவேளையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமோ ‘முதியவர் ரஜினி இந்த வயதில் அரசியலுக்கு வந்து என்ன பயன்?’ என்று இடியாய் இடித்தது. தி.மு.க. தரப்பிலிருந்தும் தாறுமாறான தாக்குதல்கள் சாடையாக நடந்தன.
அந்தவகையில் திராவிட அரசியல் கட்சிகள் அனைத்திலும் உறுப்பினராக இருந்த பெருமையை பெற்றிருக்கும் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தோ “மண் குதிரையை நம்பி கரைசேர்ந்தோர் யாருமே இல்லை. அதைப் போலத்தான் ரஜினியின் அரசியலும்.

ரஜினி அரசியல் கட்சி துவங்கமாட்டார், அரசியலுக்கு வரவும் மாட்டார். இந்த கருத்தில் நான் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். பா.ஜ.க.வின் ஊதுகுழலாக மட்டுமே அவர் இருப்பார், தொடர்ந்து அப்படியே செயல்படவும் செய்வார். அவர் தனிக்கட்சியும் துவங்கமாட்டார், பிற கட்சிகளிலும் சேரமாட்டார்.
இனி அவர் யாருக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தாலும் அவர்களுக்கு தோல்வி மட்டுமே பரிசாய் கிடைக்கும்.” என்று போட்டுத் தாக்கியிருக்கிறார். இதற்கு ரஜினி என்ன பதில் சொல்லப்போறாருன்னு பொருத்திருந்து தான் பார்க்கணும்.