ம்ஹும்.. ஒரு சதவீதம் கூட தேறவில்லை..! இவங்கதான் அடுத்த தலைமுறையை தயார் செய்யப் போறாங்க…!

Published:

TNTET Exam Model Question Papers - 2026

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு சதவிகிதம் கூட தேறவில்லை! தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!

ஆசிரியர் தகுத்தி தேர்வில் முதல் தாளில் 556 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக டிஆர்பி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி 0.33 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் 99.67 சதவீதம் பேர் தோல்வியடைந்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற டெட் தேர்வு ஜூன் மாதம் 8, 9 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் நடைபெற்றது. இதில் இரண்டு தாள்களிலும் சேர்த்து 5.42 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் முதல் தாளைப் பொருத்தவரை பிளஸ் டூவில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று டிப்ளமோ கல்வியியல் முடித்தவர் முதல் பிஎட் முடித்தவர் வரை தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.

இவர்களுக்கு 6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மேம்பாடு, பயிற்றுவித்தல் ஆகியவற்றில் 30, தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உருது ஆகியவற்றில் ஏதாவது ஒரு மொழிப் பாடத்தில் 30, ஆங்கிலம் கணிதம் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவற்றில் தலா 30 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் 150 கேள்விகள் இடம்பெற்றிருந்தன!

teachers exam e1566451793240 - 2026

ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வை 1.62 லட்சம் பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவு கடந்த 20ஆம் தேதி வெளியானது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

அந்தத் தேர்வில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர் என்ற அதிகாரபூர்வ தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் டிஆர்பி நேற்று வெளியிட்டது.

அதன்படி 1.62 லட்சம் பேரில் 551 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் 410 பேர் பெண்கள். இதன்படி 0.3 சதவிகிதம் பேர்தான் தேர்ச்சி பெற்றுள்ளனர் 99.7 சதவீதம் பேர் தோல்வியடைந்துள்ளனர்!

Related articles

Recent articles

spot_img