காவிரி பிரச்னையில் கர்நாடக அரசை கலைக்க வேண்டும்

Published:

 காவிரி பிரச்னை விவகாரத்தில் கர்நாடக அரசை கலைக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர்  வெள்ளையன் கூறியுள்ளார்.

 பாளையங்கோட்டையில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  காவிரி பிரச்சனையில் கர்நாடக அரசு நடுவர்மன்ற தீர்ப்பை மதிக்கவில்லை. அண்டை மாநிலங்கள் இவ்வாறு செயல்பட்டால் ஒருமைப்பாடு சீர்குலையும். நாட்டில் 70 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர்.
எல்லா துறைகளிலும் அந்நிய ஆதிக்கத்தை மத்திய அரசு புகுத்தி வருகிறது. அண்டை மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனையை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. காவிரி பிரச்சனை விவசாயிகள் பிரச்சனை மட்டுமல்ல. மக்களின் வாழ்வாதாரம், குடிநீர் பிரச்சனையும்கூட. கர்நாடக அரசு திருந்தவில்லையென்றால் அந்த அரசை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக எங்கள் போராட்டம் தீவிரமடையும். மே 5–ந்தேதி தஞ்சாவூரில் எங்கள் சங்கத்தின் மாநாடு நடக்கிறது. அதில் போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img