
நாங்குநேரியில் பிரச்சாரத்தில் மகிளா காங்கிரஸின் தேசியச் செயலாளர் குஷ்புவும் கலந்து கொண்டு வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் குஷ்பு பேசும்போது மத்திய, மாநில அரசுகள் குறித்து விமர்சித்தார்.
“தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. தினமும் எங்காவது ஒரு இடத்தில், பாலியல் துன்புறுத்தல் இருந்துக்கிட்டேதான் இருக்கு.. இது தினமும் நியூஸ் பேப்பர்களில் வருவதை நாம பார்த்துட்டுதான் இருக்கோம்.

சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்து போய்விட்டது. அதனால அரசை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்டால் அவர்களுக்கு எதிராக தேசத்துரோகி என்று பட்டம் தர்றதுக்கு மத்திய அரசு தயாராக இருக்கு. அந்த அளவுக்கு மத்திய அரசுக்கு ஆதரவாகத்தான் அதிமுக ஆட்சியின் செயல்பாடுகள் இருக்கிறது.

தொழில்ரீதியான வளர்ச்சிகளும் எதுவுமே இல்லை. கேட்டால் அதிமுக அரசுக்கு கடன் இருப்பதாக சொல்கிறார்கள். இதனால் அரசின் கடன் மட்டுமே அதிகமாகி கொண்டே போகிறது. அப்படின்னா, கடனில் கிடைக்கிற பணம் எங்கே போகிறது என்ற விபரமும் இல்லை. அது சம்பந்தமா வெள்ளை அறிக்கையை அரசும் வெளியிடவில்லை.

ஏதாவது புதுசா சாதனைகளை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்க அதிமுகவால் முடியவில்லை. ஆனா, இதுவே திமுகவால், முந்தைய சாதனைகளை வாக்கு கேட்க முடியும். இந்த இடைத்தேர்தலில் அதிமுக பணத்தை மட்டுமே தண்ணீராக செலவழித்து வருகிறது. இப்படி பணத்தை கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கி ஜெயித்துவிடலாம்ன்னு நினைக்கிறாங்க.
ஆனா, ஆட்சியாளர்களை பார்த்து கேள்வி கேட்கும் நிலைக்கு நம் மக்கள் வந்துவிட்டனர்.. வளர்ந்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்றால், அதிமுக ஆட்சியில் செய்த அராஜகங்கள்தான்” என்றார்.
Sharing The Glimpses @TNCCMinority Chairman @JAslamBasha Campaign With AICC Spokesperson Smt @khushsundar Nanguneri Assembly Secular Alliance Candidate Thiru @ruby_manoharan At Eruvadi Town, #நாங்குநேரி#byelection #TamilNadu pic.twitter.com/1Qz0rUSJ2r
— Tirunelveli District Congress (@INCTirunelveli) October 13, 2019