
நடிகை சமந்தா தெலுங்கில் நடிக்கும் 96 பட வேலைகள் முடியும் நிலையில் உள்ளது என்று தெரிகிறது. இது பற்றி குறிப்பிட்டு, சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஜானு ரோலின் புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.
அதோடு, அந்த கேரக்டரில் நடிப்பது குறித்து குறிப்பிட்டு இட்ஸ் ராப் என்றும், மற்றொரு முக்கியமான படம் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலாக இருந்ததாக கூறினார்.

”இது முடிந்துவிட்டது!! நேற்றையதை விட என்னைச் சிறப்பாக செயல்பட சவால் விட்ட இன்னொரு படத்தின் பாத்திரம். ட்ரீம் டீமாக இருந்ததற்காக எனது இயக்குனர் பிரேம் மற்றும் கோ-ஸ்டார் ஷர்வானந்திற்கு நன்றி ???? # ஜானு .. எனது சிறந்த வாழ்க்கையை வாழ்கிறேன். எப்போதும் நன்றியுள்ளவள்” என அதில் தெரிவித்திருக்கிறார்.

தற்போது தெலுங்கில் 96 பட வேலைகள் முடியும் நிலையில் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஜானு கதாபாத்திரத்தின் புகைபடத்தை வெளியிட்டுள்ளார். அதோடு, அந்த கேரக்டரில் நடிப்பது குறித்து குறிப்பிட்டு இட்ஸ் ராப் (Its Wrap) என்றும், மற்றொரு முக்கியமான படம் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலாக இருந்ததாக கூறினார். இந்தப் பட குழுவினருடன் வேலை செய்தது மிக சந்தோஷமாக உள்ளதாகவும், அதற்காக நன்றியும் தெரிவித்திருந்தார். இந்த படக்குழு தனது கனவு படக்குழுவாக அமைந்தது என்றும் தெரிவித்தார்.

சமந்தா கடைசியாக பி.வி.நந்தினி ரெட்டி இயக்கத்தில் ஓ பேபி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். தமிழில் கடைசியாக விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து இருந்தார்.
தற்போது அவர் தெலுங்கில் சார்வனந்த்துடன் 96 பட ரீமேக்கில் நடித்து வருகிறார். தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து, கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 96. இதனையடுத்து இந்த படம் முதழில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. தற்பொழுது, இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யபட்டு வருகிறது.

இந்த படம் த்ரிஷாக்கு மிக பெரிய அளவில் புகழையும் பெயரையும் பெற்றுக் தந்தது. அதே போல் தெலுங்கில் உருவாகி வரும் இப்படம் சமந்தாவுக்கும் நல்ல பெயரை பெற்றுத் தரும் என டோலிவுட் சினிமா உலகில் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அதன் படி ஜானு கதாபாத்திரத்தில் சமந்தாவும், ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் ஷர்வானந்தும் இணைந்து நடித்து வந்தனர். ‘ஜானு’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தைத் தமிழில் இயக்கிய பிரேம் குமார் இயக்கியுள்ளார்
சமந்தா தெலுங்கில் நாக சைதன்யாவை திருமணம் செய்த பின்பு, நல்ல கதையம்சம் கொண்ட படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார். அஞ்சான் படத்தை தவிர்த்து, வேறு எந்த படத்திலும் கவர்ச்சி நாயகியாக நடித்ததில்லை.
அனைத்து படங்களிலும் அவர் கதையின் நாயகியாக நடிக்கவே ஆசைப்படுகிறார். சென்னையில் படித்து வளர்ந்தவர் என்பதால் தமிழ் படங்களில் நடிப்பதில் இவருக்கு சிரமம் ஏற்பட்டதில்லை.



