
தேர்தல் விதிமுறைகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
நாங்குநேரி தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, வசந்தகுமார் மீது 3 வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றார் என்று, அத்தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தற்போதைய கன்னியாகுமரி தொகுதி எம்.பி.,யுமான வசந்தகுமார் மீது தேர்தல் அதிகாரி ஜான் கேப்ரியல் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில், நாங்குநேரி போலீசார், எம்.பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கலுங்கடி என்ற கிராமத்தில் நுழைய முயன்ற வசந்தகுமார் எம்.பியை விசாரணைக்காக நாங்குநேரி காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்.



