
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. விக்கிரவாண்டி-யில் 76%, #நாங்குநேரி-யில் 62% வாக்குகளும் பதிவு ஆனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு அடைந்தது. விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு அடைந்தது. வாக்குச்சாவடியில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப் பட்டது.
மேலும், மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்தது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் 24ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படும்..



