
விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக., வெற்றி முகத்தில் உள்ளது. இதை அடுத்து அதிமுக.,வினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று தமிழக முதல்வர் பழனிசாமி மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்தார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ள நிலையில் தலைமை அலுவலகத்திற்கு இனிப்புடன் தொண்டர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் D. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், விக்கிரவாண்டி, நாங்குநேரில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது! பண நாயகத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையிலான போட்டியில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது.
ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இடைத்தேர்தல் வெற்றி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியைப் பெறும் என்று கூறினார்.



