சென்னை:
தங்களது போராட்டம் தொடரும் என்று, தமிழகம் எங்கும் போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்களின் தொடர் போராட்டத்தினால் ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தார் ஆளுநர் வித்யாசாகர்ராவ்.
இதை அடுத்து, ஞாயிறு நாளை காலை 10 மணிக்கு மதுரை அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் தேவையில்லை. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சென்னை போராட்டக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், ராமநாதபுரம், கும்பகோணம், கும்மிடிப்பூண்டி, விருதுநகர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் போராட்டக்குழுவினரும் இவ்வாறே அறிவித்துள்ளனர்.
Posts by Senkottai Sriram:
- சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
- காணாமல் போன நயா பைசா கணக்கு!
- Videsi se Desi: A New Era of Secure and Aatmanirbhar Digital Communication!
- அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!
- தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயில்; ஜன.26 ஸ்பெஷல்!


