
திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன், கடந்த மே மாதம் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.
அதன்பின், மீண்டும் கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், இன்று (நவ.6) மீண்டும், உடல் நலக்குறைவு காரணமாக துரைமுருகன், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
81 வயதாகும் துரைமுருகன், உடல் சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது..