
திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்திராட்ச மாலை அணிவித்து வழிபாடு செய்த அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்
திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்து திருநீறு பூசி மரியாதை செய்த காரணத்தினால் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கும்பகோணம் அருகில் கைது செய்யப்பட் டுள்ளார்.
முன்னதாக திருவள்ளுவர் காவி உடை குறித்த சர்ச்சை ஏற்பட்டபோது மறுநாள் ஊர் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி பகுதியில் வள்ளுவர் சிலை மீது சாணி கரைத்து ஊற்றப்பட்டு அவ மரியாதை செய்யப்பட்டது இவ்வாறு அவமரியாதை செய்து அவர்கள் குறித்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்
இதனிடையே நேற்று பாஜகவினர் அந்த வள்ளுவர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்தியிருந்தனர்



