
முரசொலி அலுவலகம் பஞ்சம் நிலத்தில் உள்ளதா என்பது குறித்து ஆவணங்களை நவ.19ம் தேதி தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமைச் செயலருக்கு தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து, தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், மூத்த தலித் தலைவருமான தடா பெரியசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், நோட்டிஸ் நகலுடன் பதிவினைப் பகிர்ந்துள்ளார்.
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பற்றிய ஆவணங்களை வருகிற 19-11-2019 அன்று நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு NCSC நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
அன்று நேரில் ஆஜராகி தங்களுடைய வாதத்தை வைக்கலாம் என்று NCSC
எனக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
தடா பெரியசாமி
இந்நிலையில், #மூலப்பத்திரத்த_காட்டு_இல்லனா_முரசொலிய_பூட்டு – என்ற ஹேஷ்டாக்கில் டிவிட்டர் பதிவுகளில் கருத்துகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே, ஆளும் அதிமுக., அரசு திமுக.,வுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகக் கூறப் படும் நிலையில், தமிழக அரசு உண்மையான ஆவணங்களை ஆணையத்தில் தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.