கனமழை… இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
rain - 2026

தமிழகம் முழுவதும் நேற்று திங்கள்கிழமை கனமழை பெய்த நிலையில் இன்றும் மழை பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்கிறது

தமிழகத்தின் கடற்கரையோர மற்றும் உள் மாவட்டங்களில் நேற்று இரவும் கன மழை பெய்தது இதனால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பெரும் பாதிப்புக்கு உள்ளானது

இந்த நிலையில் இன்றும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் விடுமுறை அறிவிப்பு ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டது … அதே நேரம் மழை வெள்ள பாதிப்பு உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் தலைமையாசிரியர் முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவுறுத்தினார். ஆனால் பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மழை வெள்ளம் காரணமாக இன்று (3.12.19.) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி உத்தரவு வெளியானது.

கடலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது கனமழை காரணமாக விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கடலூர்,
பெரம்பலூர் திருவாரூர் மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

கனமழை காரணமாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்

மழையால் அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட் டுள்ளார்

மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு .

மழையால் பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

கடலூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக கடலூர், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. விருதாச்சலம் கல்வி மாவட்ட பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.