December 6, 2025, 7:23 AM
23.8 C
Chennai

திருச்சியில் வித்யாசமாக… பேருந்து பயணச்சீட்டு கண்காட்சி!

bus ticket - 2025

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் பேருந்து பயணச்சீட்டு கண்காட்சி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். கண்காட்சியில் பேருந்து பயணச்சீட்டு சேகரிப்பினை பட்டதாரி வாலிபர் சாமிநாதன் காட்சிப்படுத்தியிருந்தார்

பயணச்சீட்டு சேகரிப்பு குறித்து பேசுகையில், பேருந்து என்பது சாலையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்ட ஊர்தியாகும்.

இன்றைய நகர வாழ்க்கையில் இன்றியமையாத அங்கமாக பேருந்து பயணம் விளங்குகின்றது.

மேலும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சுற்றுலாத்துறைகள் என்று பலதரப்பினர்கள் பேருந்துகளை பயன்படுத்தப் படுகின்றனர்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய துறையாகும். தனியாராலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

bus ticket - 2025

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும் துறை 1972ல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது.

இது தமிழ்நாட்டிற்குள்ளேயும்கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்குத் தமிழ்நாட்டிலிருந்தும் பேருந்துகளை இயக்குகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்
தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் துறையானது
மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை),
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் (கோயம்புத்தூர்),
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் விழுப்புரம்,
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் கும்பகோணம்,
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் சேலம்,
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் மதுரை,
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி,
மாநில விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC), என செயல்படுகிறது.

1996 முன்பு போக்குவரத்துக் கழகத்தின் பழைய பெயர்களானது தலைவர்கள் பெயரில் போக்குவரத்துக் கழகம் இயங்கியது பின்பு அவை தமிழக அரசின் போக்குவரத்து கழகம் ஆக மாற்றப்பட்டது

போக்குவரத்துக் கழகத்தின் முன்பு உள்ள பெயரும் தற்போதைய பெயர் மற்றும் செயல்படும் இடங்களாவன

பல்லவன் (PTC) மாநகர் போக்குவரத்துக் கழகம் (மா.போ.க) சென்னை தென் சென்னை சென்னை TN-01-N-

டாக்டர்.அம்பேத்கர் (DATC) மாநகர் போக்குவரத்துக் கழகம் (மா.போ.க) சென்னை வட சென்னை சென்னை TN-01-N-** TN-02-N

தந்தை பெரியார் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) விழுப்புரம் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் & புதுச்சேரி விழுப்புரம் TN-32-N-*,TN-31-N

பட்டுக்கோட்டை அழகிரி தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) விழுப்புரம் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் வேலூர் TN-23-N-**TN-25-N-

எம்ஜியார் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) விழுப்புரம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் காஞ்சிபுரம் TN-21-N-**

சோழன் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கும்பகோணம் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் & காரைக்கால் கும்பகோணம் நாகப்பட்டினம் TN-68-N-**

தீரன் சின்னமலை தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கும்பகோணம் திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் திருச்சி கரூர் TN-45-N-**

மருது பாண்டியர் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கும்பகோணம் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் காரைக்குடி TN-63-N-**

வீரன் அழகு முத்துக்கோன் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கும்பகோணம் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை TN-55-N-**

சேரன் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கோயம்புத்தூர் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் கோயம்புத்தூர் திருப்பூர் TN-38-N-**

பாரதியார் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டம் உதகை TN-43-N-**

ஜீவா தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கோயம்புத்தூர் ஈரோடு மாவட்டம் ஈரோடு TN-33-N-**

அண்ணா தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) சேலம் சேலம் நகரம், நாமக்கல் மாவட்டங்கள் சேலம் TN-30-N-**

அன்னை சத்தியா தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) சேலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் தருமபுரி TN-29-N-**

பாண்டியன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) மதுரை மதுரை மாவட்டம் மதுரை TN-58-N-**

கட்டபொம்மன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி திருநெல்வேலி நகரம், திருநெல்வேலி கிராமம், தூத்துக்குடி மாவட்டங்கள் திருநெல்வேலி TN-72-N-**

நேசமணி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் TN-74-N-**

ராணி மங்கம்மாள் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) மதுரை திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் திண்டுக்கல் TN-57-N-**

வீரன் சுந்தரலிங்கம் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) மதுரை விருதுநகர் மாவட்டம் விருதுநகர் TN-67-N-**

திருவள்ளுவர் மாநில விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) தமிழ் நாடு உள் மற்றும் வெளி மாநில சென்னை TN-01-N-**

JJTC (renamed as RGTC [ராஜிவ் காந்தி]) மாநில விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) தமிழ் நாடு வெளி மாநில சென்னை TN-01-N-**என செயல்பட்டன.

bus ticket - 2025

மேற்கண்ட பேருந்து பயணச்சீட்டு முதல் இன்றைய பயணச்சீட்டு வரை பட்டதாரி இளைஞர் சுவாமிநாதன் பயணச்சீட்டினை சேகரித்து காட்சிப்படுத்தினார்.

பயணச்சீட்டின் எண்னைக்கொண்டு விகடகவி எண்கள், தொடர்ச்சியான எண்கள், ஏறுமுக எண்கள், பேன்சி எண்கள், பிழை எண்கள் கொண்ட பல்வேறு பயணச்சீட்டுகளை வகைப்படுத்தியிருந்தார்.

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகரன், பொருளாளர் அப்துல் அஜீஸ், பாண்டியன், முகமது சுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன், இளங்கோவன், ராஜேஷ் ,மன்சூர் உட்பட பலர் இதில் பங்கேற்றார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories