குமரி ‘சிவாலய ஓட்ட’ பக்தர்களுக்கு இளநீர், பழம் வழங்க இந்து முன்னணி கோரிக்கை!

sivalaya ottam2 - 2026

மஹா சிவராத்திரி சிவாலய ஓட்டம் பக்தர்களுக்கு இளநீர், பழம் வழங்க குமரி இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

சிவாலய பக்தர்களுக்கு வழக்கம்போல் இளநீர், பழம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடமும் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரிடமும் இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

sivalaya ottam1 - 2026

இதுகுறித்து இந்து முன்னணி குமரி மாவட்டச் தலைவர் மிசா சோமன் நம்மிடம் கூறியவை…

வியாழக்கிழமை இன்று ஆட்சியரிடமும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடமும் இந்து முன்னணி சார்பில் மனு அளித்துள்ளோம்.

குமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 24) நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவையொட்டி, பக்தர்கள் பங்கேற்கும் சிவாலய ஓட்டம் வியாழக்கிழமை இரவு (பிப். 20) தொடங்குகிறது.

sivalayaottam2 - 2026

முன்சிறை திருமலை மஹாதேவர் கோயிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் 12 சிவாலயங்களை தரிசித்தபடி 24 மணி நேரத்துக்குள் 110 கி.மீ. தொலைவைக் கடந்து சிவராத்திரி விழாவில் பங்கேற்பர்.

இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கேற்பதற்காக மாசி ஏகாதசி தினத்தில் மாலை அணிந்து விரதமிருக்கின்றனர். இந்த பக்தர்களுக்கு அரசு சார்பில் டோக்கன் வழங்கப்பட்டு, பொன்மனை சிவன் கோயிலிலும், சிவாலய ஓட்டம் நிறைவுபெறும் திருநட்டாலம் கோயிலிலும் தலா ஒரு இளநீர் மற்றும் பழம் வழங்கும் நடைமுறை இருந்தது.

இந்த உத்தரவு 1939 பிப்ரவரி 14 ஆம் தேதி திருவிதாங்கூர் சமஸ்தான அரசிதழில் வெளியிடப்பட்ட ஒன்று. ஆனால் தற்போது இந்த நடைமுறையை முடக்கி வைத்துள்ளது தமிழக அரசு!

எனவே பக்தர்களுக்கு மீண்டும் இளநீர், பழம் வழங்கவும், குடிநீர், மின்சாரம், சாலை, போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற வசதிகளை செய்துதரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி நாங்கள் மனு கொடுத்துள்ளோம்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

  • kumari hindumunnani1 - 2026
  • kumari hindumunnani2 - 2026
  • kumari hindumunnani6 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories