ஈவேரா.,வால்… அரைநூற்றாண்டுக் குமுறல்! நாளை ராமபிரான் படத்துக்கு ‘பூமாலை’ ஊர்வலம்!

ஆன்மிகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
bjp rama procession salem1 - 2026

1971இல் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் ரவுடி கும்பல்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, திமுக., ரவுடியிசத்தால் வாய்மூடி உள்ளம் குமுறியவர்கள்… அரை நூற்றாண்டு காலத்துக்குப் பின்னர் 2020ல் இன்று ராமபிரான் படத்துக்கு பூமாலை ஊர்வலம் நடத்தவுள்ளனர்.

1971இல் இந்துக் கடவுளர் உருவங்களுக்கு அவமரியாதை செய்யும் விதத்தில், சமூக சீரழிப்புவாதி ஈ.வே.ராமசாமி நாயக்கர், சேலத்தில் ஊர்வலம் நடத்தினார். அன்று ஆட்சி செய்த திமுக., அரசு அவருக்கு உறுதுணையாக இருந்து, திக., ரவுடியிஸத்துக்கு உதவி செய்தது. எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் ஆளும் கட்சியின் குண்டர்களால் மிரட்டப் பட்டார்கள்.

திமுக., போலீசாரை பகடைக் காயாக்கி மேலும் அச்சுறுத்தியது. அதனால், அந்த நிகழ்வைக் கண்டு உள்ளுக்குள் ரத்தக் கண்ணீர் வடித்தவர்கள் பலர். அன்று அவ்வாறு ராமபிரான் படத்துக்கு அவமரியாதை செய்த ஈவேரா.,வும் இப்போது உயிருடன் இல்லை; அவருக்கு உதவியாக அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்த கருணாநிதியும் பூமிக்குள் புதைந்துவிட்டார்.

இப்போது அன்றைய நிகழ்வுகள் குறித்த விவாதம் கிளம்பியுள்ளதால், அரை நூற்றாண்டுக்குப் பின்னர் எந்த சேலம் நகர வீதிகளில் ராமபிரான் திருவுருவப் படத்துக்கு அவமரியாதை செய்யப் பட்டதோ அதே வீதிகளில் ராமபிரானுக்கு மரியாதை செலுத்தும் வகையில் திருவுருவப் படத்துக்கு மாலை மரியாதை செய்து ஊர்வலம் செல்ல சேலம் மாநகர் மாவட்ட பாஜக.,வினர் தீர்மானித்துள்ளனர்.

இதை முன்னிட்டு பாஜக.,வினர் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். #நாளைசேலத்தில் #ஐம்பதுஆண்டுகால_அவமானத்தை துடைத்தெறிய சேலம் மாநகரில் இந்துக்களின் இதய தெய்வமான எம்பெருமானுக்கு பூ மாலை அணிவித்து ஊர்வலமாக சென்று மரியாதை செய்து பூஜை செய்தல் நடைபெறும். சேலம் செவ்வாய்பேட்டை அரிசி மண்டி அருகில் இருந்து தீயணைப்பு நிலையம் வரை.

24-1-2020 காலை 9.30 மணிக்கு இந்த ஊர்வலம் நடைபெறும், அனைவரும் வருக… என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

bjp rama procession salem - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.