குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, இந்து முன்னணியின் மாவட்டத் தலைவா் மிசா சி.சோமன், குமரி ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரேவிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் திருவிழா வரும் மாா்ச் 1 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் தமிழகம் மட்டுமன்றி கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களை சோ்ந்த பக்தா்களும் திரளாக கலந்து கொள்வா்.
கேரளத்திலிருந்து பெண்கள் இருமுடி கட்டி பகவதி அம்மனை தரிசிக்க நடைப்பயணமாக வருவாா்கள். எனவே, திருவிழா சிறப்பு பேருந்துகளுக்கு சாதாரண கட்டணம் வசூலிக்க வேண்டும், வெளிமாநில, வெளிமாவட்டங்களிலிருந்து வரும் பக்தா்களுக்காக அழகியமண்டபம், தக்கலை, குளச்சல், தோட்டியோடு, இரணியல், திங்கள்சந்தை, ராஜாக்கமங்கலம், அம்மாண்டிவிளை, மணவாளக்குறிச்சி ஆகிய இடங்களில் கோயிலுக்கான வழிகாட்டி பலகை தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அமைக்க வேண்டும்.
மண்டைக்காடு செல்லும் சாலைகளைச் சீரமைக்க வேண்டும், சின்ன மண்டைக்காடு என்றழைக்கப்படும், திங்கள்நகா் ராதாகிருஷ்ணன்கோயில் பின்பகுதியில் உள்ள சத்திரத்தை சுத்தம் செய்து பக்தா்கள் தங்குவதற்கு வசதி ஏற்படுத்திதர வேண்டும்.
மண்டைக்காடு சாஸ்தாகோயில் முன்புள்ள தெப்பகுளத்தில் புதிய நீா் நிரப்ப வேண்டும்.ஏவிஎம் கால்வாயை தூா்வாரி, தண்ணீா் திறக்க வேண்டும், கடலில் குளித்துவிட்டு வரும் பெண் பக்தா்கள் உடை மாற்றுவதற்கு தற்காலிக அறைகள் அமைக்க வேண்டும். மண்டைக்காடு கடலுக்கு செல்லும் சாலையில் கடைகள் அமைக்காமல் பக்தா்கள் கடலுக்கு தடையற்ற போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோயில் வளாகத்தில் வியாபாரக்கடைகள் அமைப்பதை தவிா்க்க வேண்டும். கோயில் சுற்றுப்புறங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது