December 5, 2025, 6:45 PM
26.7 C
Chennai

கொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்!

kovilpatti attack - 2025

கொரொனா வைரஸ் பரவல் விவகாரத்தில், பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் பலர் அடாவடித்தனங்களில் ஈடுபடுகின்றனர். சிலர் தங்கள் சமுதாயக் குழுக்களுடன் ஒன்றிணைந்து, காவல்துறையினர் மீது கல்வீசியும் தாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் இது போன்று சோதனைக்கு வரும் போலீஸார், சுகாதாரப் பணியாளர்களைத் தாக்காமல், ஒத்துழைப்பு கொடுக்கும்படி திமுக., உள்ளிட்ட கட்சிகள் அந்த மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்.

தமிழக பாஜக., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இது குறித்து கருத்து தெரிவித்த போது….

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கயத்தாறு அருகே உள்ள அய்யனாரூத்து என்ற கிராமத்தை சேர்ந்த காஜா மொஹிதீன் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக திருநெல்வேலி மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அந்த நபரின் குடும்பத்தினருக்கு தொற்று பரவியதா என்பதை சோதனை செய்ய சென்றனர்.

ஆனால் அவர்கள் மீது சோதனை செய்ய கூடாது என்று கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மேலும், மருத்துவ குழுவை ஊரை விட்டே துரத்தியுள்ளார்கள். இது குறித்து சுகாதார பணியாளர்களும் , மருத்துவர்களும் கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள்.

இப்படி செய்வது முறையல்ல என்று நாம் பலமுறை கூறியும் தொடர்ந்து மருத்துவ பணியாளர்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. மதரீதியாக இதை பேசக்கூடாது என்று சொன்னாலும், மதரீதியான கருத்துக்களை சொல்லியே சோதனையை மறுத்து வருகிறார்கள் என்பதை தமிழக அரசும், போலி மதசார்பின்மை பேசுபவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் பலம் வாய்ந்த கட்சிகளான தி மு க மற்றும் அ தி மு க தங்களின் கட்சிகளில் உள்ள இஸ்லாமிய நிர்வாகிகள் மூலமும், தோழமை கட்சி தலைவர்கள் மூலமும் அந்தந்த பகுதிகளில் உள்ளவர்களிடம் விளக்கி சொல்லி அவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்க செய்வதே தமிழகத்திற்கு நலன் பயக்கும்.

மாநில அரசு இனியும் தாமதம் செய்யாமல், இது போன்ற நிகழ்வுகளை முன்னெச்செரிக்கையுடன் தடுக்க வேண்டும். இது தொடர்ந்தால், சமூக பரவல் ‘அதிகரித்தால்’ மற்ற இடங்களிலும் பதட்டம் அதிகரிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

அய்யனாரூத்து கிராமத்தில் மருத்துவர்களை, காவல் துறையினரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்வதோடு, அந்த நபரின் குடும்பத்தை அதே சமுதாயத்தின் நலன் கருதியாவது சோதனைக்கு உட்படுத்த வேண்டும்… என்று, தமிழக பாஜக., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதேபோல், இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் தெரிவித்துள்ள கருத்து….

“மருத்துவ அதிகாரியை தாக்கிய “மர்ம “மதத்தைச் சார்ந்த ” மர்ம” மனிதர்களைக் கைது செய்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுகாதாரபகுதிக்கு உட்பட்ட வெள்ளாளன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் காளிராஜ் இன்று”அய்யனார்ஊத்து “என்ற கிராமத்தில் கொரோனா, நோய்த் தொற்று தடுப்பு
பணியில் கடந்த மூன்று நாட்களாக வேலைசெய்து
கொண்டிருக்கிறார். இந்த கிராமத்தில் நடந்த பணிகளை ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க தனது மொபைல் போன் மூலம் படமெடுத்து வைத்துள்ளார்.

4.04.2020 எப்பொழுதும் போல் பணிக்குச் சென்றவரை அந்த கிராமத்தினர், “மர்ம மதத்தினர், பெயர் சொல்லக்
கூடாத மர்ம நபர்கள்” சூழ்ந்து கொண்டு, பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்து உயிரச்சம் ஏற்படுத்தும் வகையில் கூட்டம் கூடி கலவரம் செய்ய முயற்சித்த சூழலில் சுமார் 100 நபர்கள் சூழ்ந்துகொண்டு கொலை மிரட்டல் விடுத்து
இருக்கிறார்கள். மருத்துவ அதிகாரியின் செல்போன் பறிக்கப் பட்டிருக்கிறது.

அதிலிருந்த மர்ம மதத்தை சார்ந்த மர்ம மனிதர்கள் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 15 நபர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். ஓய்வில்லாமல் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மிகஅர்ப்பணிப்புடன் வேலைசெய்து
கொண்டிருக்கும் சுகாதார ஆய்வாளர் தாக்கப்பட்டதை
இந்து தமிழர் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனத்தை
பதிவு செய்து கொள்கிறோம்.

உயிர் காக்கும் பணியில்இருக்கக் கூடிய அரசு ஊழியர்களை கும்பலாக சேர்ந்துமிரட்டி கொலைமிரட்டல் விடுப்பதை, தமிழகத்தில் ஓட்டு அரசியலுக்காக “மர்ம மதத்தைச் சார்ந்த மர்ம மனிதர்கள் “என்றால் வாய் மூடி மௌனிகளாக இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களை கண்டிக்கிறோம்.

மருத்துவ அதிகாரிகளை தாக்கிய நபர்கள் அடையாளம்காணப்
பட்டு உடனடியாக கைதுசெய்யப்பட்டு தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட வேண்டும். மேலும் இதுபோன்று நோய் தொற்று தடுப்புபணியில், கணக்கு எடுப்பு பணியில் ஈடுபடக் கூடியமருத்துவதுறை, வருவாய்துறை அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு தமிழக அரசும், காவல்துறையும் வழங்கவேண்டும் என்றுஇந்து தமிழர் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்… என்று கூறியுள்ளார் ராம ரவிக்குமார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories