உலகம் முழுவதையும் அச்சுறுத்திக்கொண்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால், தமிழ மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். பெரு மழை, வெள்ளம், விபத்து, நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்களை சந்தித்திருந்தாலும், நோய் தொற்று அபாயம் என்பதை இந்த நூற்றாண்டில் முதலில் பார்க்கும் தலைமுறையாக நாம் இருக்கிறோம்.
இதனை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்பதற்கு அரசும், மருத்துவ நிபுணர்களும் தீவிரமாக சிந்தித்து பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதன் மூலம் நோய் தொற்று மேலும் பெரிய அளவில் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் தீவிரம் காட்டத் துவங்கிய நிலையில், மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் பலவிதமான உதவிகள் தேவைப்பட்டன. இந்து முன்னணி ஒரு போராட்ட இயக்கமாக இருந்தாலும், சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, முழு மூச்சாக களத்தில் இறங்கி சேவைப் பணி செய்யத் தொடங்கியது. சேவையின் மூலம் மக்களிடம் நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். சென்னை, புதுச்சேரி உட்பட அனைத்து மாவட்டங்களிலும், நமது சேவைப் பணியானது விரிவாக நடைபெற்று வருகிறது.
இந்து முன்னணி பேரியக்கத்தின் சேவைப் பணிகள் சிலவற்றை தங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறோம்..
நோய் தொற்று வெளிப்பட்டவுடனேயே, முககவசம் தயாரித்தும், விலைக்கு வாங்கியும், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் அனைவருக்கும் தொடர்ந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
ஏழை எளிய மக்கள், முதியோர், வெளிமாநிலத்திலிருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு உணவும், மளிகை பொருட்களும், காய்கறிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நரிக்குறவர்கள், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் இச்சேவை அதிக கவனம் கொடுத்து செய்யப்படுகிறது.
இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு காலையில் நீர் மோரும், இரவில் தேனீரும் கொண்டு சென்று கொடுக்கப்பட்டு வருகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி, நோய் தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்களுக்கு `கபசுரநீர்’ ஆங்காங்கே தரப்பட்டு வருகிறதுகாலை வேளைகளில் பால் வாங்க முடியாதவர்களுக்காக, நேரடியாக பால் விநியோகத்தை செய்து, மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க உதவி செய்து வருகிறது.
வீட்டிலேயே இருந்தபடி, நாட்டு நடப்பு மற்றும் உபயோகமான விஷயங்களை சிந்திக்க `பசுத்தாய்’ மின்னணு தனிச்சுற்று இதழாக தினசரி வாட்ஸ்அப், முகநூல் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அனுப்பப்படுகிறது.
நோய் தொற்றை தடுக்கும் வகையில், வீதிதோறும் மஞ்சள், வேப்பிலை கலந்த நீரை தெளித்து தூய்மைப்படுத்தும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது.
நோய் தொற்றை போக்கும் பாரம்பரியமான முறையான வேப்பிலையை தோரணங்களை வீடுகளிலும், வீதிகளிலும் கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது.
ரேஷன் கடைகள், தாசில்தார் அலுவலகம், மருத்துவமனை போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மக்களை சமூக இடைவெளி ஒழுங்கை ஏற்படுத்தி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் சில இடங்களில் முழு பாதுகாப்பு உடை(கோட்)கள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்கள், மேலும் புதுவை, காரைக்கால் சேர்த்து 39 மாவட்டங்களிலும் அவசர உதவி மைய எண்கள் மாவட்ட ஆட்சியாளிடம் கொடுத்து, எந்த நேரத்திலும் உதவிட தயாராக இருப்பதை உறுதி கூறியிருக்கிறது.
என்றும் மக்கள் பணியில் இந்து முன்னணி சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளதைப் போல, நாடு சந்திக்கும் இந்த இக்கட்டான தொற்று நோய் பிரச்சனையிலிருந்து விடுபடவும், மக்கள் நல்லபடியாக வாழவும் மேற்கண்ட சேவைகள் உட்பட அவ்வப்போது தேவையான உதவிகளையும் ஆங்காங்கே உள்ள தொண்டர்கள் செய்து வருகிறார்கள்.