வேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு!

Published:

government vellore medical college - 2026

வேலூர் அருகே கொரோனா ஆய்வுக்கு சென்ற சுகாதார குழுவினர் சிறைபிடிக்கப் பட்டனர்.

வேலூரை அடுத்த கருகம்பத்தூரில் கொரோனா பாதித்த மக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக அப்பகுதிக்கு சென்ற சுகாதாரக் குழுவினர் சிறைபிடிக்கப்பட்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் அவர்களை மீட்டு வந்தனர். இந்தச் சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நாடு முழுவதும் சுமார் 5000 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் பெருமளவில் தற்போது இருந்து வருகிறது. மாநிலத்துக்கு அடுத்து தமிழகத்தில் 600க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் காட்பாடிச் சேர்ந்த பாதிரியார் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

மேலும் வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் ஆர் என் பாளையம் கருகம்பத்தூர் வேலூர் டிட்டர்லைன் பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேருக்கும் கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

இந்த நிலையில் கருகம்பத்தூர் பகுதியில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நோய் தொற்று உள்ளதா என்பது குறித்து கண்டறிவதற்காக 4 பேர் கொண்ட சுகாதாரக் குழுவினர் நேற்று அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்தவர்கள் 4 பேரையும் பணி செய்ய விடாமல் அவர்களை சிறை பிடித்து அங்குள்ள வழிபாட்டு தலம் ஒன்றில் அடைத்து வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் சிறைபிடித்த வைத்த சுகாதார குழுவினர் 4 பேரையும் மீட்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

Related articles

Recent articles

spot_img