சேமியா – தர்பூசணி கேசரி
தேவையானவை:
சேமியா – ஒரு கப்,
தர்பூசணி ஜூஸ் – 2 கப்,
சர்க்கரை – ஒன்றரை கப்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
முந்திரி, திராட்சை – தலா 10.
செய்முறை:
கடாயில் நெய் விட்டு, சேமியா, முந்திரி, திராட்சையைத் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தர்பூசணி ஜூஸ் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்த சில நிமிடங் களில் வறுத்த சேமியாவை சேர்த்து வேக விடவும்.
பாதி வெந்ததும், அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பாத்தி ரத்தில் ஒட்டாமல் வந்ததும்… வறுத்த முந்திரி, திராட்சை, மீதியுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கினால், கலர் பவுடர் சேர்க்காமலே இயற்கையான நிறத்துடன் சேமியா, தர்பூசணி கேசரி ரெடி!