December 6, 2025, 3:58 AM
24.9 C
Chennai

சேவாபாரதியின் சேவைப் பணிகள்

mafoi pandiarajan

சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்ட பெருநகர சென்னை மாநகராட்சி 104 ஆவது வட்டத்தைச் சார்ந்த தூய்மைப் பணியாளர்கள் பாராட்டி மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மே 16 அன்று புரசைவாக்கம் தர்மபிரகாஷ் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சேவாபாரதி தமிழ்நாடு மாநிலத் தலைவர் B. ரபு மனோகர் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கே பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஆர்.எஸ்.எஸ். வடதமிழக மாநில அமைப்பாளர் திரு பூ.மூ. ரவிக்குமார் சிறப்புரையாற்றினார். சென்னை மாநகர தலைவர் G. மதிவாணன் மகிழ்வுரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் 104 வட்டத்தைச் சேர்ந்த பணியாளர்கள் மாநகராட்சி ஊழியர்கள் மொத்தம் சுமார் 175 பேர்கள் நபர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

சேவா பாரதி

நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் மாநில அமைப்பாளர் பூ.மூ.ரவிக்குமார் சில பணிகளை நாம் நிறுத்த முடியாது. உதாரணத்திற்கு நமது உடலில் சில உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கலாம். ஆனால் இருதயம் போன்ற உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்க முடியாது. அதைப் போல சமுதாயத்தில் சில அமைப்புக்களுக்கு ஓய்வு கொடுக்க முடியாது.

அதில் ஒன்று இந்த தூய்மைப் பணியாளர்கள். இந்த தூய்மைப் பணியாளர்கள் இல்லை என்றால் இந்த சமுதாயமே கெட்டுநாறிவிடும். தூய்மைப் பணியாளர்கள் அம்மா போன்றவர்கள். அம்மா எப்படி குடும்பத்தில் எல்லா வேலைகளையும் செய்து வீட்டை தூய்மையாக வைத்து இருப்பார்களோ, அதை போல தூய்மைப் பணிகளும் இந்த சமுதாயத்தை தூய்மையாக வைத்து நம் அனைவரையும் பாதுகாத்து வருகிறார்கள். அவர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள்.

இன்று மக்களுக்கு மனரீதியான பயம் ஏற்பட்டுள்ளது. சென்னை வெள்ளம் வந்தபோது பாதிக்கப்பட்டவர்களை தங்கள் வீட்டில் தங்க வைத்து, அவர்களுக்கு உணவு கொடுத்து காப்பாற்றியவர்கள் சென்னைவாசிகள்.
அதைப் போல இந்த கொரோனா பிரச்சனையால் மக்களிடம் ஏற்பட்டுள்ள பயத்திற்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டியது சென்னைவாசிகள் தான் என்றார்.

அடுத்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன், உலகத்தில் கொரோனா நோயால் பலர் பலியாகி இருக்கும்போது நம்நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலகத்துக்கே இன்று தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நாம் முன்னேறியிருக்கிறோம். அமெரிக்கா அதிபர் இந்தியாவியிலிருந்து மருந்துகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.

நாம் சித்த வைத்தியம் போன்ற மருத்துவ முறைகள் மூலம் உயிர் பலியை குறைத்து இருக்கிறோம். மத்திய, மாநில அரசு எடுத்த சில முயற்சிகளும் நம்முடைய உணவு முறையும் உயிர் பலியைக் குறைய மிகப்பெரிய காரணங்கள் என்றார்

இன்று தூய்மைப் பணியாளர்கள் மதிப்பு கூடி இருக்கிறது. இது ஒரு சமூகப் பணி என்று தூய்மைப் பணியாளர்களின் பணியைப் பாராட்டினார்.

சேவாபாரதி

சேவாபாரதி தமிழ்நாடு மூலமாக திருவெற்றியூர், பெரம்பூர், துரைப்பாக்கத்தில் கண்ணகி நகர், பேரூர், தாம்பரம், சேலம், பண்ருட்டி, சிதம்பரம், ஈரோடு ஆகிய பகுதிகளில் உணவு சமைக்கப்பட்டு இதுவரை சுமார் 1,60,000 உணவு பொட்டலகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

இதில் சேலத்தில் 38வது நாளாக இரு இடங்களில் சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதி, சுகாதாரப் பணியாளர்கள், மாநகரட்சி பணியாளர்கள் என பலருக்கு தொடர்ந்து உணவு வினியோகம் செய்து வருகிறோம். நேற்று மட்டும் சுமார் 1,350 உணவு பொட்டலங்கள் வினியோகி செய்து இருக்கிறோம்.

சேவாபாரதி நடத்தும் தையல் பயிற்சி மையங்கள் மூலம் மாஸ்க் தயாரித்து மக்கள் அதிகம் கூடும் ரேஷன் கடை, மார்க்கெட் பகுதிகளில் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் அறிவுறுத்தல்படி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் ஒரு லட்சம் பேர் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர்.

sevabharathi

அதைப் போல வருமானம் இன்றி வாடும் மக்களுக்கு மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.1,000 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் இதுவரை 11,000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கி இருக்கிறோம்.

இதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 800 குடும்பங்கள், 1000 மாற்று தினாளிகள் குடும்பங்கள் நரிக்குறவர்கள், இருளர்கள் சுமார் 800 குடும்பங்களும் அடங்கும். இன்னும் இது போன்ற பணிகளை சேவாபாரதி செய்து வருகிறது.

சேவாபாரதி சேவைப் பணிகள் மூலம் மூன்று லட்சம் நபர்கள் பயன் அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories