
தாளிச்ச போண்டா
தேவையான பொருள்கள்
புழுங்கலரிசி -ஒரு கப்
பச்சரிசி. -ஒரு கப்
உளுத்தம்பருப்பு -முக்கால் கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -ஒரு கப்
உப்பு எண்ணெய் -தேவையான அளவு
கருவேப்பிலை. -சிறிது
கடுகு -அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு. -ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல். – 2 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய். -3
இஞ்சி – ஒரு துண்டு
செய்முறை
அரிசியும் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும் அதனுடன் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து போட்டு துருவிய இஞ்சியைப் போட்டு கருவேப்பிலையை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து, தேங்காய்த் துருவலை சேர்த்து பெருங்காயம் சேர்த்து நன்றாக பிசைந்து எண்ணையை காயவைத்து அதில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு சிவந்ததும் எடுக்கவும்.



