
இஞ்சி தொக்கு:
தேவையான பொருட்கள்:
இளம் இஞ்சி -25 கிராம்
பச்சை மிளகாய். -5
புளி. -நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் உப்பு -தேவையான அளவு
வெல்லம் _சிறிதளவு
செய்முறை
இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் வாணலியில் எண்ணெய் விட்டு இவற்றை வதக்கவும் பின்பு இவற்றுடன் புளி வெல்லம் உப்பு சேர்த்து அரைக்கவும் அரைத்ததை எண்ணெய் விட்டு வதக்கி எடுத்து வைக்கவும் சப்பாத்தி தோசை சாதம் இவற்றுடன் இதனை சாப்பிடலாம் உடலுக்கு மிகவும் நல்லது பித்தம் சளி கபம் ஆகியவற்றை அறவே நீக்குகிறது