நீட் தேர்வு வந்ததால், மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அரியலூர், செந்துறை அருகே குழுமூரில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவி அனிதா ப்ளஸ் 2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
அனிதாவின் மொத்த மதிப்பெண் 1176.
பொறியியல் கல்விக்கான கட் -ஆப் – 199.75.
மருத்துவக் கல்விக்கான கட் – ஆப் – 196.75
இந்த நிலையில் அனிதா நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்ணே பெற்று தேர்வாகாமல் போனார். இதனிடையே, தான் தேர்வாகாமல் போன விரக்தியில் ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ”எங்களுக்கு என்ன கிடைச்சிருக்குதோ அத வச்சு தான் நாங்க மேல வர முடியும்.. எந்த வசதியும் இல்லாத எங்களுக்கு நீட் கஷ்டத்ததான் கொடுத்திருக்கு…” என்று கூறியிருந்தார்.
இதனிடையே, அரியலூர் மாணவி தற்கொலை குறித்து கருத்து தெரிவித்த சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ண, “மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார். மேலும், அவர், எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல – ராதாகிருஷ்ணன்
* மாணவர்கள் இனி இது போன்று முடிவு எடுக்காமல் துணிந்து போராட வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
அனிதா தற்கொலை செய்துகொண்டது வேதனை அளிக்கிறது; எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சங்கத்தின் டாக்டர் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களில் மாணவி அனிதாவும் ஒருவர்.
அனிதாவின் தற்கொலைக்கு முழுப்பொறுப்பேற்க வேண்டியவர்கள் மத்திய,மாநில அரசுகள்தான் என்று கூறியுள்ளார் கி.வீரமணி. இது குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி எம்.பி., மாணவி அனிதாவின் தற்கொலை மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது என்று வருத்தத்தை தெரிவித்துள்ளார்.


