
மதுரை தெப்பக்குளம் பகுதியில் முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய திருநங்கை கைது!
மதுரை.டிச.7. மதுரை தெப்பக்குளம் பகுதியில் பெண்ணை தாக்கிய திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.
மதுரை கேட்லாக்ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வி 35. அதே பகுதியை சேர்ந்தவர் ராணி என்ற லலிதா ராணி 40 திருநங்கைஆவார்.இவருக்கும் லலிதாராணிக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராணி இரும்பு கம்பியால் தாக்கி படுகாயம் அடைந்த பாண்டிச்செல்விதெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மதுரை தபால் தந்தி நகர் கண்மாயில் மூழ்கி முதியவர் மரணம்!
மதுரை.டிச7. மதுரை தபால் தந்தி நகர் விரிவாக்கப் பகுதியில் குளிக்கச் சென்ற முதியவர் கண்மாயில் மூழ்கி பலியானார்.
மதுரை தபால் தந்தி நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் 55 இவர் மயில் நகர் கணக்கன் குளம் கண்மாய்க்கு குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த.கிராம நிர்வாக அதிகாரிமுத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த மகேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இவரது சாவு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
2020 ஆம் ஆண்டில் மதுரை நகர் மற்றும் புறநகரில் நூற்று மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது போலீசார் அதிரடி
மதுரை.டிச.7. மதுரை நகர்மற்றும்புறநகரில் 2020 ஆம் ஆண்டில் மட்டும் நூற்றிமூன்றுபேரை போலீசார் அதிரடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
மதுரை நகரில் கொலை கொள்ளை வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்களை அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.
இவ்வாறாக 2020ஆம் ஆண்டில் மட்டும் பல்வேறு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளான தெப்பக்குளம்மூன்று, ஜெய்ஹிந்துபுரம் 5, அவனியாபுரம் 11, திடீர்நகர் ஒன்று சுப்பிரமணியபுரம் 7.,எஸ.எஸ்.காலனி14, கரிமேடு 4, தல்லாகுளம் மூன்று,செல்லூர் ஐந்து,கூடல் புதூர் நான்கு, கே.புதூர்ஒன்று, மதிச்சியம் ஐந்து, அண்ணாநகர் ஒன்பது, ரயில்வே பகுதியில் 1 ஆக மொத்தம் 73 பேரை நகர் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் முப்பது பேரையும் குண்டர்சட்டத்தில் போலீசார் கைதுசெய்துள்ளனர். மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் சேர்த்து மொத்தம் நூற்றிமூன்று பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைதுசெய்துள்ளனர்.