
மதுரையில் 10 நபர்கள் வசித்து வந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தின் காஜா என்ற தெருவில் மூன்று மாடி கட்டடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் இரண்டு வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. மேலும் முதல் தளத்தில் இரண்டு வீடுகள் மற்றும் இரண்டாம் தளத்தில் ஒரு வீடும் அமைந்துள்ளது. மேலும் இந்த கட்டிடத்தில் மொத்தமாக 10 நபர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அடித்தளத்தில் தீடீரென சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மூன்று மாடி கட்டிடமானது அடியுடன் சாய்ந்து அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்துள்ளது.
இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்துள்ளனர். அவர்கள் உடனடியாக வீட்டிற்குள் மாட்டிகொண்ட சிறுமியை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். அதன்பின்பு பெரியார் நிலைய தீயணைப்பு துறையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தலைமையில் தீயணைப்பு துறையினர் விழுந்த கட்டிடத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பலத்த மழை பெய்ததன் காரணமாக கட்டிடம் இடிந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பயங்கர சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டதால் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன.