சென்னையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை!

Published:

robbery
robbery

சென்னையிலுள்ள எம்.கே.பி நகர் முகமது அபி முஸ்தபா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 27 ஆயிரம் பணம் 17 பவுன் தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளி அரைஞாண் கொடி போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களை பதிவு செய்து விசாரித்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் வீட்டில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

Related articles

Recent articles

spot_img