என் சாவிற்கு அவர்கள்தான் காரணம்.. வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட தூய்மைப் பணியாளர்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் கோவை சற்றுமுன்
rangasamy
rangasamy

மாநகராட்சி மருத்துவமனையில் வேலை செய்யும் தூய்மை பணியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோவை குனியமுத்தூர் பி.கே புதுரை சேர்ந்தவர் ரங்கசாமி(40). இவர் மாநகராட்சி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் ரங்கசாமி நேற்று முன்தினம் இரவு திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அவரது செல்போனில் ஒரு வீடியோ ஆதாரம் சிக்கியுள்ளது.

இறக்கும் முன்பு சுமார் 3 நிமிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில், “நான் பணிபுரியும் மருத்துவமனையில் ஊழியர் ஒருவரும், இளம்பெண்ணும் தனியறையில் ஒன்றாக இருந்த காட்சியை பார்த்தேன். இதனால் மருத்துவமனையில் பெண்கள் ஆடை மாற்றும் போது நான் போட்டோ, வீடியோ எடுத்ததாக கூறி என் மீது வீண் பழி சுமத்துகின்றனர். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் என்னால் இனி தலை நிமிர்ந்து வாழ முடியாது. என் சாவுக்கு காரணமான அந்த மூவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அந்த மூவரிடமும் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.