தொலைதூர கல்விக்கு மாணவர் சேர்க்கை! 25 முதல் விண்ணப்ப படிவம்!

உள்ளூர் செய்திகள் கல்வி சற்றுமுன் சென்னை
Chennai-University-1
Chennai-University-1

சென்னைப் பல்கலைக் கழகத்தின் தொலை நிலைக் கல்வி நிறுவனத்தின் மூலம் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகள், முதுநிலை கணினி பயன்பாடு, முதுநிலை பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகள், முதுநிலை வணிக நிர்வாகவியல் படிப்புகள் ஆகியவற்றில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.

அதற்கான விண்ணப்பங்கள் 25ம் தேதி முதல் வினியோகிக்கப்படும். ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை மையத்தின் மூலம் சேர விருப்பம் உள்ளவர்கள் அங்கு விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் http://online.ideunom.ac.in இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். இது தவிர சென்னைப் பல்கலைக் கழகத்தின் 117 கற்றல் மையங்கள் மூலமாகவும் சேரலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.