நடிகர் ரஜினி, கமல்ஹாசனின் ரசிகர்களை தொடர்ந்து எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் வைரலாகி வருகிறது.
வருகிற மே 1 ஆம் தேதி அதாவது நாளை அல்டிமேட் ஸ்டார், தல, என அனைவராலும் அழைக்கப்படும் முன்னணி நடிகரான அஜித்குமாருடைய 50 வது பிறந்தநாள்.
உழைப்பாளர் தினமான மே 1 மிகவும் பொருத்தமாக அஜித்குமாரின் பிறந்த நாளாக அமைந்து இருக்கிறது. எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் சினிமாவில் முன்னணி நடிகராக போராடி ஜெயித்தவர் அஜித்.
தன்னம்பிக்கைக்கும் உழைப்பிற்கும் மட்டுமல்லாமல் மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் முறைக்கும் அஜீத் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இளைஞர்களிடையே திகழ்கிறார். சத்தமில்லாமல் அடுத்தவர்களுக்கு உதவுவதிலும் சிறந்தவராக விளங்குகிறார். மேலும் அவர் பன்முக திறமை உள்ளவராக விளங்குகிறார்.
இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாள் நாளை கொண்டாட உள்ளதால் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பல்வேறு விதத்தில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
அந்தவகையில் மதுரையில் எங்களின் பொன்மனச்செம்மலே என்ற வாசகம் அடங்கிய போஸ்டரில் நடிகர் அஜித்குமாரின் புகைப்படம் படத்தை எம்ஜிஆர் போன்று சித்தரிக்கப்பட்டு ஒட்டியுள்ள போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.